28 Jun 2019

ஒரு மாணவர் பள்ளி



ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறுகளில்
இரண்டாயிரத்துக்கும் மேல் இருந்தோம்
அறுபது ஆசிரியர் பள்ளி அது
இரண்டாயிரங்களில்
ஆயிரத்துக்குக் கீழ் வந்தோம்
முப்பது ஆசிரியர் பள்ளி அது
இரண்டாயிரத்துப் பத்துகளில்
ஐநூறுக்குக் கீழ் வந்தோம்
பதினைந்து ஆசிரியர் பள்ளி அது
இரண்டாயிரத்துப் பதினைந்துகளில்
இருநூறுக்கும் கீழ் வந்தோம்
ஆறு ஆசிரியர் பள்ளி அது
இரண்டாயிரத்துப் பதினேழுகளில்
இருபதுக்கும் கீழ் வந்தோம்
ஓராசிரியர் பள்ளி அது
இரண்டாயிரத்து இருபதுகளில்
அதற்கும் கீழ் வர முடியாது என்பதால்
ஒரு மாணவர் பள்ளி அது
பூஜ்ய ஆசிரியர் பள்ளி அது
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...