29 Jun 2019

குழாய் போட்டு எடுக்க வேண்டியதும், கொடுக்க வேண்டியதும்!



            யாரைப் பார்த்தாலும் தண்ணீர் பிரச்சனைக்குப் போர்க்கால அடிப்படையில் தீர்வுங்றான்! அடிப்படையில் தண்ணீர் பிரச்சனையே வருங்காலத்தில் போர்தான். அது எப்புடிங்றத கீழே நிறுவுறேன் பாருங்க!
            ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி ஒரு லோடு மணலை லாரியில பத்தாயிரம், பனிரெண்டாயிரம்னு அடிச்சப்போ பகீர்னு இருந்துச்சு. அதையெல்லாம் நம்ம ஊருல ஒரு காலத்துல காசு யாரு கொடுத்து வாங்கியிருக்கா? ஆறு முழுக்க மணலா இருக்கும். மாட்டு வண்டிய கொண்டுட்டுப் போயி இஷ்டத்துக்கு அடிச்சிக்க வேண்டியது. இப்போ ஒரு லாரி மணல எறக்கணும்னா இருபத்தாஞ்சாயிரம் வரைக் கேக்குறான். நம்மூரு ஆற்றுல இருந்தப்ப தெரியாத மணலோடு மதிப்பு இப்போ தெரியுது.
            தண்ணி பத்தியெல்லாம் சொல்லவே வேண்டியதில்ல. எங்க போரைப் போட்டாலும் பத்தடி, பதினைஞ்சடின்னு அதிகபட்சம் முப்பது அடிக்குள்ள நல்ல தண்ணி கொட்டு கொட்டொன்னு கொட்டும். இங்க பாத்தீங்கன்னா அப்போ பதினைஞ்சடி, இருபதடி கைப்பம்புகள்தான் அதிகம்.
            அப்புறம் கதை என்னாச்சுன்னா முப்பது அடி, முப்பதஞ்சு அடியில தண்ணி வர மாட்டேங்குதுன்னு எண்பது, நூறடின்னு போரு போட ஆரம்பிச்சி, இப்போ எரநூறு, முந்நூறு அடிக்கு வந்து நிக்குது. இந்தப் போரு போட ஆரம்பிச்சப் பின்னாடிதான் புரிஞ்சிது தண்ணீர்ப் பிரச்சனை வருங்காலத்தில் போர்தான்னு. பாத்தீங்களா நிறுவிட்டேன். கணக்குப் போட்டுப் பாத்ததால வந்த புத்தி!
            எரநூறு அடி, முந்நூறு அடி தண்ணி பத்தலன்னு அவனவனும் ஆயிரம், ஆயிரத்து ஐநூறுன்னு தண்ணி லாரில்ல தண்ணி வாங்க ஆரம்பிச்சானுங்க! ஆரம்பத்துல எல்லா பயலுக்கு இது வேடிக்கையாத்தான் இருந்துச்சு. இன்னொரு பக்கம் வயித்தெரிச்சலாவும் இருந்துச்சி. என்னடா மாப்ளே இப்படி ஆயிடுச்சின்னு அவனவனும் சென்னையில இருக்குற சொந்தக்காரன், பந்தக்காரனுக்குப் போனு அடிச்சுப் பேசுனா, அவனுவோ சிரிக்கிறானுவோ, "டேய் மச்சாங்! இங்க அதே தண்ணி லாரி பத்தாயிரம், பன்னென்டாயிரம்னு!"
            அப்பதாம் தோணுச்சிப் பாருங்க! அட மக்கா! தண்ணியே இந்த ரேட்டுக்குப் போறப்போ அப்புறம் ஏன்டா இங்க ஹைட்ரோ கார்பன எடுக்கிறேன்னு கொழாயப் போட்டுக் கொல்லுறீங்க! அங்கங்க தாகத்தால தவிக்கிற மக்களுக்குக் கொழாயப் போட்டுக் கொடுங்கடா! அத்தோட இந்த மழைதண்ணி பேஞ்சா அது பூமிக்குள்ளப் போறதுக்குக் கொழாயப் போடுங்கடா!
            இது பாதுகாப்பான பெட்ரோலிய மண்டலமா இருந்துகிட்டு தாகத்துக்கு மனுஷன் என்ன பெட்ரோலு, டீசலு, மண்ணெண்ணெய்னா குடிக்க முடியுது? தண்ணியத்தானே குடிக்க வேண்டியதா இருக்கு! செரி! அப்படி எடுக்கற பெட்ரோலாவது விலை கம்மியாவா கிடைக்கது? அரபு நாட்டை விட விலை கூடத்தானே கிடைக்குது!
            அடப் போங்கடா! சொல்லி தாவு தீந்துப் போச்சி! இந்தப் பூமியிலேந்து எடுக்க வேண்டியதும், கொடுக்க வேண்டியதும் தண்ணிதான்டா! எடுத்த தண்ணிய மழைத் தண்ணி வடிவத்துல பூமியில போட்டுடணும்! மழைத்தண்ணில வடிவத்துல பூமியில போட்டு வெச்சத எடுத்துக்கணும்! அவ்வளவுதான்டா மேட்டர்!
            அத்தோட சின்னதா இன்னொரு மேட்டர்! இந்த மீத்தேன், கேஸூ, பெட்ரோலு அது இதுன்னு எடுத்துட்டுப் போற லாரியை, குழாயை ஒடைப்பு இல்லாம, லீக்கேஜ் எப்படிக் கொண்டு போறீங்க! அதே மாதிரிதாம் தண்ணிய எடுத்துட்டுப் போற லாரியையும், கொழாயையும் ஒடைப்பு இல்லாம கொண்டுட்டுப் போகணும்!தண்ணிய கொண்டுட்டுப் போறதுல என்னா ஒரு அலட்சியங்றீங்க!
*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...