24 Jun 2019

கதி


கதி
உலகம் ஒரு கிராமம்
அது சரி
அகதிக்கு எந்த நாட்டில்
இடம் இருக்கிறது

உலகமயமாக்கல்
தாரளமயமாக்கல்
அகதிக்கு உண்டா

தனிமைமயமாக்கல்
மட்டும்
அகதிக்கு இருக்கிறது

அகதிகளை ஏற்காத நீங்கள்
யுத்தங்களையும்
ஏற்காமல் இருந்திருக்கலாம்

உங்கள் யுத்தங்கள்
உங்களுக்கான யுத்தங்கள்
உங்களால் ஆன யுத்தங்கள்
நாங்கள்தான் தவறாகப்
புரிந்து கொண்டோம்
அகதிகளை உருவாக்கத்
தெரிந்தவர்கள்
அகதிகளை ஏற்க மாட்டார்கள்
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...