எல்லா நாளும் வாக்கு எண்ணும் நாளாகவே இருந்தால்
எப்படி இருக்கும்? எந்நேரமும் ஒரே பரபரப்பா இருக்கும். அத்தோடு டாஸ்மாக்கும் மூடிக்
கிடக்கும்.
*****
காலம் கடத்துவதை நிறுத்துவோம். சோம்பலுக்கானக்
காரணத்தைக் கண்டறிவோம். சோம்பலுக்கான காரணம் சோம்பல்தான். காரணம் கண்டுபிடிப்பது
சோம்பலுக்கான மற்றுமொரு காரணம் கற்பித்தலாகி விடுகிறது.
*****
ஜன்னல் பக்கத்துல உட்கார்ந்து இருக்கின்ற
டிரைவரே வியர்வை தாங்கவில்லை என்று சட்டைப் பட்டனைக் கழற்றி விட்டுக் கொள்கிறார் எனும்
போது, பேருந்தின் நடுவே கூட்டத்தின் மத்தியில் சிக்கியிருக்கும் நம் நிலைமையை யோசித்துப்
பாருங்கள்! சட்டையையே கழற்றி வீச வேண்டியதுதான்!
*****
தியானம் பண்ணுகின்ற போதுதான் எழுந்து
நின்ற காட்டுக் கத்தலாக கத்த வேண்டும் போலிருக்கிறது என்ற நம் நண்பன் கிருஷ்ண லிங்கேஷ்,
இதைத் தவிர்க்க வழி இருக்கிறதா? எனக் கேட்க...
வழியா இல்லை உலகில் என்று,
நீ செத்தால் உனக்கு நீயே எப்படி மெளன அஞ்சலி
செலுத்துவாயோ அப்படி நினைத்துக் கொண்டு உட்கார் என்று சொன்னதும்,
ஆள் கப் சிப்!
சாவுன்னதும் மனுஷன் பயந்து அப்படியே அமைதி
ஆகிடறான். அதுவும் அவன் செத்ததுக்கு அவனே மெளன அஞ்சலி செலுத்துவது என்றால்...
*****
இந்தி தெரிந்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும்
என்றால்... இந்தித் தெரிந்த வடநாட்டுக்காரர்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு ஏன் பிழைப்புத்
தேடி வருகிறார்கள்?! ஏனென்றால் பிழைப்பு வாதத்தை விட உழைப்பு வாதமே சோறு போடும் என்று
எல்லாருக்கும் தெரியும்.
*****
ஒரே நேரத்தில் ரெண்டு விதமாக ஸ்வீட் கொடுக்க
தமிழர்களால் மட்டுமே முடியும். ஒரு கையில் ஜிலேபி. இன்னொரு கையில் அல்வா. ஆளுங்கட்சி,
எதிர்க்கட்சி என்று பாகுபாடில்லாமல் தமிழர்கள் கொடுத்து இருக்கிறார்களே டபுள் டமாக்கா
ஸ்வீட் எடு கொண்டாடு தேர்தல் முடிவுகள்!
*****
No comments:
Post a Comment