12 Jun 2019

குற்றம் பெரிசு! தண்டனை சொகுசு!



குற்றம் பெரிசு! தண்டனை சொகுசு!
பெரிதினும் பெரிது செய்
சொகுசு சிறையில்தான்
தூக்கிப் போடுவார்கள்
*****
டெம்ளேட் யுத்தங்கள்
உங்கள் துப்பாக்கிகள் சுடா விட்டால்
உங்கள் குண்டுகள் வெடிக்கா விட்டால்
உங்கள் பீரங்கிகள் நகரா விட்டால்
உங்கள் விமானங்கள் குறி பார்க்கா விட்டால்
உங்கள் யுத்தங்கள் நடக்கா விட்டால்
எங்களுக்கு இந்தக் காயங்கள் ஏற்பட்டிருக்கப் போவதில்லை
உங்கள் சிகிச்சைக்கான தேவையும் ஏற்பட்டிருக்கப் போவதில்லை
உங்கள் ஆறுதல்களுக்கான வார்த்தைகளுக்கும்
தேவை இருந்திருக்கப் போவதில்லை
உலக சமாதானத்துக்கான
ஓர் அவசியமும் இருந்திருக்கப் போவதில்லை
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...