11 Jun 2019

புள்ளிக் கணக்கு



எவ்வளவு பெரிய கட்டிடங்கள்
வடிவான சாலைகள்
பிரமாண்ட பூங்காக்கள்
விரையும் வாகனங்கள்
திட்டமிட்ட மாயா ஜாலங்கள்
அடப் போடா
எவ்வளவு பெரிய வானம்
வடிவான மேங்கள்
பிரமாண்ட நட்சத்திரங்கள்
விரையும் காற்று
காலை மதியம் மாலை இரவு
வானில் வண்ண வண்ண மாயா ஜாலங்கள்
உம் திட்டங்களுக்காக பூமியில் விழுந்து
வானுக்கு முன் மண்டியிடு
வானின் சின்ன புள்ளி பூமி
பூமியின் சின்ன புள்ளி நீ
உன்னினும் சின்ன புள்ளி உம் திட்டம்
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...