9 May 2019

கடல் அதே கடல்


கடல் அதே கடல்
ஒரு காலத்தில் நிறைய முத்துகளை அள்ளினார்கள்
உப்பை மூட்டை மூட்டையாய் இறைத்து எடுத்தார்கள்
மீன்களைக் கொத்துக் கொத்தாய்க் கொள்ளையடித்தார்கள்
காலம் மாறி விட்டது
இப்போது கொடுக்கின்ற நேரம்
கதிர் வீச்சுக் கனநீரை கலந்து விடுகிறார்கள்
கழிவுகளை அடைத்து நடுக்கடலில் வீசுகிறார்கள்
சாக்கடை நதிகளை திசை மாற்றி விடுகிறார்கள்
உப்புக் கடல் தப்புக் கடலாகி விட்டது
மீன்கள் புற்றுநோய் வந்து அலைகின்றன
முத்துகள் நோய்க் கட்டிகளாகி விட்டன
கடல் அதே கடல்தான்
கடலை இமயமாகவோ
இமயத்தைக் கடலாகவோ
இடம் மாற்றிக் கொள்ளும் அப்போதும்
கடல் அதே கடல்தான்
மனிதர்கள் அப்போது வேறு மனிதர்கள்
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...