23 May 2019

ஒரே நாளில் கோடீஸ்வரராக... அசத்தலான வழி!



            நாட்டில் வறுமையை ஒழிக்க வேண்டும் என்று பேசுகிறார்களே! வறுமையை ஒழித்து விட்டால்...
            அரசியல்வாதிகள் எப்படி வாக்குறுதிகள் கொடுக்க முடியும்?
            அரசியல்வாதிகள் எப்படி ஓட்டு கேட்க முடியும்?
            அரசியல்வாதிகள் எப்படி நலத்திட்டங்களை அறிவிக்க முடியும்?
            நலத்திட்டங்களை அறிவிக்காமல் அவர்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?
ஒரு தேசத்தில் அரசியல்வாதிகள் இருக்க வேண்டும் என்றால் அந்தத் தேசத்தில் வறுமை இருக்க வேண்டும். வறுமை இல்லாத தேசத்தில் எந்த அரசியல்வாதிகள் இருப்பார்கள்?
            அதுவும் இல்லாமல் இந்தியா ஏழை நாடாக இருந்தால்தான் அரசியல்வாதிகள் கோடீஸ்வரர்களாக இருக்க முடியும்!
*****
            இந்த ஒரு தேசத்தில்தான் ஆன்ம ஞானம் பற்றிப் பேசிப் பேசியே மூட்டை மூட்டையாய்ப் பணத்தைக் குவிக்க முடிகிறது.
            ஞானம் அடைவதே ஆசிரமம் ஆரம்பித்து ஹவாலா மோசடியில் ஈடுபடுவதற்காகத்தான் போலிருக்கிறது.
            இப்படி ஹவாலா மோசடியில் இறங்குவதற்காகத்தான் இந்தத் தேசத்தில் பலபேர் ஞானமே அடைகிறார்கள்.
            அடப் போங்கப்பா! நீங்களும் உங்கள் ஞானமும்!
            ஒரே நாளில் கோடீஸ்வரராக பனிரெண்டு மணி நேரத்தில் ஞானம் அடைந்து, அடுத்தப் பனிரெண்டு மணி நேரத்தில் ஆசிரமம் ஆரம்பிப்பதே ஒரே வழி!
*****
            வந்தாரை வாழ வைக்கும் நாடு தமிழ்நாடு என்றார் எம் தமிழாசான்.
            புரிகிறது ஐயா! நாம் ஏன் இன்னும் வறுமையை வாழ வைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது இப்போது நன்றாகவே புரிகிறது ஐயா! என்றேன்.
            கோபம் வந்து விட்டது எம் தமிழாசானுக்கு. எம் காதைத் திருகி எட்டரை நாழிகை அப்படியே அமரச் செய்து விட்டார்.
            இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்று பாரதியார் என்ன அழகாகப் பாடியிருக்கிறார்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...