8 May 2019

டச் செல்லும் ஒரு விரல் புரட்சியும்



            ஒரு சிலரைப் பார்க்கும் போது மனதுக்குள் படுகிறது - ஒரு விரல் புரட்சி என்பது டச் செல்லை வைத்துக் கொண்டு ஒரு விரலால் நோண்டிக் கொண்டு இருப்பதாகவும் இருக்கலாம்!
*****
            எல்லா தலைவர் மேலயும் மோசமான விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் தேர்தலில் யாரோ ஒரு தலைவர் வெற்றி பெறத்தானே செய்கிறார். விமர்சனங்களையே பார்த்துக் கொண்டிருந்தால் ஜெயிக்க முடியுமா என்ன? அரசியலில் படிக்க நிறைய பாடங்கள் இருக்கின்றன!
*****
            "எங்க கட்சிச் சின்னத்துக்கு ரெண்டு ஓட்டு பார்சேல்!" என்ற சொன்னவர்களிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டை நோட்டாவுக்குப் போடுவது ஒருவகை வீரம் என்றால், பணத்தை வாங்கிக் கொண்டு பணம் ஏதும் தராத கட்சிக்கு ஓட்டைப் போடுவது இன்னொரு வகை வீரம். இதில் எந்தத் தரப்பிடமிருந்தும் பணத்தை வாங்காமல் நேரடியாக நோட்டாவுக்கு ஓட்டைச் செலுத்துவது மற்றொரு வகை வீரம். இப்படித்தான் வீரம் பற்றி தேர்தல் நடந்து முடிவுகள் தெரியும் நாட்கள் வரைப் பேசப்பட்டு வருகிறது.
*****
            விளம்பரத் தேவையை நான் விரிவாக விளங்கிக் கொண்டது எப்போது என்றால் நகைக்கடை, ஜவுளிக்கடை விளம்பரங்களில் சம்பந்தப்பட்ட முதலாளிகளே நடிக்கத் தொடங்கிய போதுதான்!
*****
            பஞ்ச் டயலாக்குகள் காமெடி டயலாக்குளாக மாறினால் அதுதான் வாழ்க்கை. காமெடி டயலாக்குகள் பஞ்ச் டயலாக்குகளாக மாறினால் அதுதான் சினிமா. ஆக சினிமா என்பது வேறு, வாழ்க்கை என்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...