7 May 2019

எழுத்தாளராய் ஜீவித்திருப்பதன் ரகசியம்! (யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க!)



            ரெண்டு வாரத்துக்கு முன்னாடி கிலோ தக்காளி இருபது ரூபாய்க்கு வாங்குனேன்னு சொன்னா கடைக்காரரே நம்ப மாட்டேங்றார்! அதாம்லே கிலோ தக்காளி எண்பது ரூவா எபெக்ட்!
*****
            காசும் செலவு பண்ணக் கூடாது! வாழ்க்கையையும் அனுபவிக்கணும்! கிராமத்துல இருந்தாதாம்லே அதெல்லாம் முடியும்! ரெண்டு ரூவாயைக் கொடுத்து வாட்டர் பாக்கெட் வாங்கலேன்னா இந்த டவுன்லயெல்லாம் தாகத்தைக் கூட தணிச்சுக்க முடியாதுல்லே!
*****
            ஒரு எழுத்தாளர் ஜீவித்திருப்பதன் ரகசியம் என்னவென்றால்... அவர் எழுதுகிறார் என்பது அவர் வீட்டில் இருப்பவர்களுக்கே தெரியக் கூடாது!
*****
            ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாதுன்னு சொல்ல முடியல. ஆனா ஒண்ணு சொல்ல முடியும்னு நினைக்கிறேன். அப்படி ஓட்டுக்குப் பணம் வாங்குனா உங்களுக்குப் பணம் கொடுக்குறதுக்காகத்தான் ஊழல் பண்றேன்னு பணம் கொடுத்தவன் சொன்னா அதை எப்படி எதிர்கொள்றதுன்னு கேட்கிறேன்!
*****
            மழை வேண்டி ஒங்க ஊரு கோயில்ல யாகம் பண்ணிட்டீங்களான்னு கேட்குறாங்க! இது தெரியாம பல ஊர்ல குளம், குட்டை வெட்டி, மரம் மட்டை எல்லாம் வளர்த்து, மழை நீர் சேமிப்புக்கு ஏற்பாடெல்லாம் பண்ணி ஏமாந்துட்டாங்களே மக்கா!
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...