2 May 2019

நாற்பது நாய்களுக்குக் கஞ்சி ஊற்ற தயாராக இருக்கும் தாய்!



            நம்ம ஊரு செல்லாயிக் கிழவி மக்களைப் பெற்ற மவராசி.
            ஆம்பள பிள்ளைங்க அஞ்சு பேரு, பொம்பளப் பிள்ளைங்க நாலு பேரு.
            ஒம்போது பிள்ளைங்கள பெத்து வளர்த்தப் பாவம் செல்லாயிக் கிழவியைக் கடைசிக் காலத்தில் நாய்குட்டிகளையும், பூனைக் குட்டிகளையும் வளர்த்துத் தீர்க்குற மாதிரி ஆயிடுச்சு.
            ஒரு பயலுக்கும், ஒரு பொண்ணுக்கும் கிழவிக்குச் சோறு போட மனசில்லாம போயிடுச்சு.
            இந்தச் செல்லாயிக் கிழவியாவது ச்சும்மா இருக்கலாம்ல. தள்ளாத வயசுல ஓடியாடி வேலைக்குப் போயி சம்பாதிச்சு நாயிக்கும், நாய் குட்டிங்களுக்கும், பூனைய்க்கும், பூனைக் குட்டிகளுங்கும் வடிச்சுக் கொட்டுது.
            "எனக்கு எவம்டா கஞ்சி ஊத்த ஆளில்லன்னு ஊருல சலம்பிட்டுத் திரியறது? என்னால நாப்பது நாயிங்களுக்குப் பொங்கிக் கஞ்சி ஊத்த முடியும்டா!" என்று செல்லாயிக் கிழவி சொல்வது நாய்களையா? அது பெற்ற பிள்ளைகளையா? என்று சமயத்தில் கேட்கும் போது குழப்பத்தை உண்டு பண்ணி விடுகிறது.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...