6 May 2019

வைத்தியமும் ஒரு வட்டம்தான்!



            நம்ம ஊரு கோலப்பன் குடிச்சுக் குடிச்சே ஈரல் வீங்கிக் கிடந்தான். அங்க இங்க வைத்தியம் பார்த்து தேற மாட்டான்னு நெனைச்சு கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரில சேர்த்தாச்சி.
            சேர்த்ததுக்கு அப்புறம் ஊருக்குள்ள எல்லாருக்கும் ஒரு நெனைப்பு. எங்க கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரில சரியா பார்க்க மாட்டாங்கன்னு நினைச்சு கிராமத்துல வூட்டுக்கு ஆயிரம் ரூவா வீதம் வசூல் பண்ணி லட்சத்து அறுபத்தஞ்சாயிரத்த கோலப்பனோட தகப்பன்காரர்கிட்ட கொடுத்து அனுப்பிச்சு தனியார் ஆஸ்பத்திரில சேர்க்க வெச்சாச்சு.
            நம்ம கோலப்பன் போயி சேர்ந்த நேரமோ? தனியார் ஆஸ்பத்திரிக பண்ற கோலமோ? அந்த டெஸ்ட்டு, இந்த டெஸ்ட்டுனு டெய்லி டெஸ்ட், வீக்லி டெஸ்ட், மன்த்லி டெஸ்ட்னு பள்ளிக்கூட கணக்கா ஆயிரத்தெட்டு டெஸ்ட்ட எடுத்து இருந்த காசையெல்லாம் காலி பண்ணிட்டு, 'இதுக்கு மேல நம்மால முடியாது, கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போங்க! அங்கதான் இது மாதிரி கேஸீங்க பொழைக்கும்னு சொல்லிட்டாங்க.' தனியார் ஆஸ்பத்திரில.
            இப்படியா,
            கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரி சரியா இருக்காதுன்னு நெனைச்சு தனியார் ஆஸ்பத்திரில வெச்சு வைத்தியம் பார்த்தா... கட்ட கடைசியா எல்லா காசையும் பிடுங்கிப்புட்டு கடைசியில தனியார் ஆஸ்பத்திரி கை காட்டுறது என்னவோ கவர்ன்மென்ட் ஆஸ்பிட்டல்தான்! வைத்தியம் ஒரு வட்டம்தான் சாமி!
+++%%%+++

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...