பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸப் என்று ஆன
பிறகு நியூஸ் பேப்பர் வாங்கிப் படிப்பது கொஞ்சம் குறைந்து விட்டது என்று சொல்ல முடியவில்லை.
நம் தெருவையே கணக்கில் எடுத்துக் கொண்டால் நியூஸ் பேப்பர் வாங்கிப் படிப்பவர்களின்
எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. இது என்ன மாயம்? யார் செய்த மாயம்? என்றெல்லாம் இதில்
யோசிக்க என்ன இருக்கிறது! அவ்வளவு வதந்திகளைப் பரப்பினால் வேறு என்னதான் வழியிருக்கிறது?
விளைவு பாருங்கள்! வாட்ஸப்பில் செய்தி
வந்திருக்கிறது என்று சொன்னால்... அது கிடக்கட்டும், நியூஸ் பேப்பரில் வந்திருக்கிறதா?
என்று விவரமாகக் கேட்கிறார்கள். அட! வாட்ஸப்புக்கு நேர்ந்த கொடுமையே!
*****
சோத்தைச் சாப்பிடாதே! சோத்தைச் சாப்பிடாதே!
சுகரு வரும்னா வேற என்னத்தைச் சாப்பிடுறது?
நாட்டுல சோறு கிடைக்காம பட்டினி கெடக்குறவங்க
எத்தினி பேரு தெரியுமா?
சோத்த கம்மியாக் சாப்பிடு, கறிகாயை அதிகமாச்
சாப்புடுன்னா... நாட்டுல தக்காளி விலை என்ன தெரியுமா?
ஏதோ அரசாங்கம் ரேஷன் கடையில இலவசமாக அரிசியைக்
கொடுக்குறதால அதைச் சாப்பிடுறோம். அதே மாதிரி இலவசமாக காய்கறியையும் கொடுத்தாதாம்
இனி வர்ற காலங்களில காய்கறியச் சாப்பிட முடியும் போலருக்கு.
சோத்தைச் சாப்பிடறதாலதாம் சுகர் வருதுன்னு
சொல்றத நிப்பாட்டுங்கப்பா! இது பெரிய விசயமாகி அரிசியினலாதாம் சுகர் வருதுன்னு நெனச்சிகிட்டு
அரசாங்கம் அரிசி கொடுக்குறத நிறுத்திப்புட்டா என்னா பண்றது?
சோத்தைத் திங்குறதால ஒண்ணும் சுகரு வரல.
தின்னச் சோத்துக்கு ஒடம்பு வளைஞ்சு உழைக்காம இருக்குறதாலதாம் சுகரு வருது. அது மட்டுமில்லீங்க!
நாட்டுல ஏகப்பட்ட பேரு பட்டினி கெடக்க, ரெண்டாளு சோத்தை அள்ளித் திங்குறவனுக்கு சுகரு
வராம என்னா செய்யும்?
*****
ஏம்ப்பா இங்ஙனே ப்ளாட் போட்டிருக்கியே?
எத்தனை அடில தண்ணி வரும்னு கேட்டா... போன் பண்ணா அஞ்சே நிமிஷத்துல தண்ணி வரும்ங்றான்.
அதாம் வாட்டர்கேன்ல தண்ணி வரும்ங்றத அப்படிச்
சொல்றான்.
அப்படியே இப்படிக்கா திரும்பி அப்படிக்கா
போனீங்கனா அந்த முக்குலதாம் டாஸ்மாக்கு, சரக்குத் தண்ணிக்கு தட்டாவே ஆகாதுங்றான்.
நாட்டுல நல்லா போடுறாங்க ப்ளாட்டு! இப்படியே
போட்டுகிட்டுப் போனா அப்புறம் மனுஷனும் ஆயிடுவான் ப்ளாட்டு!
*****
No comments:
Post a Comment