3 May 2019

வெளிநாட்டு டூருக்குப் போகும் சிலைகள்



            தஞ்சாவூர் கோயில், தாராசுரம் கோயில், திருவாரூர் கோயில் என்று பார்க்க பார்க்க வியப்பாகத்தான் இருக்கிறது. ரொம்ப கலைநயத்தோடு இருந்த ஆட்கள் பார்த்துப் பார்த்து வடித்திருக்கிறார்கள். ரொம்ப கொலைநயத்தோடு பின்னால் வந்த ஆட்கள் நிறைய கோயில் சமாச்சாரங்களை வெளிநாட்டுக்குக் கடத்தியிருக்கிறார்கள்.
            பிரிட்டிஷ்காரன் சுதந்திரம் கொடுத்தான் என்றால் சூட்சமத்தோடுதான் கொடுத்திருக்கிறான் இல்லையா! இனிமே இந்த நாட்டை ஆட்சி பண்ணி நாம்ம எதையும் கடத்திட்டுப் போகணும்னு அவசியமில்லே. இவனுங்களே கடத்திட்டுக் கொண்டு வந்து நம்மகிட்டு கொடுத்துடுவானுங்கன்னு ரொம்ப சரியா சிந்திச்சுதான் விடுதலையைக் கொடுத்திருக்கான். தட் சிலை கடத்தல் சமாச்சாரங்கள் மொமன்ட்.
            இனிமேல் நம்ம கோயில் சிலைகளை நம்ம கோயில்ல போயி பார்க்க முடியாம வெளிநாட்டு மியூசியங்கள்லதான் பார்க்க முடியும்ங்ற மாதிரியான நிலை நாம்ம கும்புடற கடவுளுக்குக் கூட வரக் கூடாதுதாம். என்ன பண்றது? வந்திட்டு.
            எல்லா கெட்டதுலயும் ஒரு நல்லது இருக்குற மாதிரி வெளிநாட்டுலாயவது நம்ம சிலைகள் பாதுகாப்பா இருக்கேன்னு சந்தோஷப்பட்டுக்கணும். வேற பண்றதுக்கு ஒண்ணுமில்ல. அவிய்ங்க நம்ம ஆட்கள் மாதிரி அதைக் கடத்தி இன்னொரு நாட்டுக்கு, இன்னொரு உலகத்துக்கு வித்துட மாட்டாங்க பாருங்க. வெளிநாட்டுலயாவது நம்ம சிலைகள் பாதுகாப்பா இருக்கட்டும்னுதான் நம்ம ஆட்கள் சிலையைக் கடத்தி வித்திருப்பாங்க போலிருக்கு. அதுவுமில்லாம ஒரே சிலையை எத்தனை நாட்கள் பாத்துட்டு இருக்கிறது? புதுப்புது சிலை படைப்புகள் உருவாகட்டும்னு நெனச்சி கடத்தினாங்களோ?! கடத்துறப்ப அவிய்ங்க மனசுல என்ன இருந்துச்சோ!
            எந்த நாட்டுல எந்த ஊருல இருந்தா என்ன? எல்லாம் நம்ம ஊரு! நம்ம சாமிங்கதான்! நம்ம சிலைகதான்!
            சும்மாவா அப்பவே நம்ம புறநானூற்றுப் புலவன் பாடி வெச்சிருக்காம், "யாதும் ஊரே! யாவரும் கேளிர்"ன்னு.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...