25 May 2019

இரண்டு வழிகளில் சம்பாதிப்பவர்கள்!



            இலவசங்களை அறிவித்து விட்டால், வேலைவாய்ப்புகளை அறிவிக்க வேண்டியதில்லை. வேலைவாய்ப்புகளை அறிவித்து விட்டால் இலவசங்களை அறிவிக்க வேண்டியதில்லை.
*****
            எப்படியும் ஆற்றில் தண்ணீரை விடப் போவதில்லை. அதனால்தான் எட்டு வழிச் சாலையில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. ஆற்றில் தண்ணீர் ஓடா விட்டாலும், ரோட்டில் வாகனங்களாவது ஓடட்டும் என்று நினைக்கிறார்கள் போலும்.
*****
            நாட்டில் அரசாங்க ஆஸ்பத்திரிகளும் இருக்கின்றன. மருத்துவக் காப்பீடுகளும் இருக்கின்றன. இரண்டு வழிகளிலும் வைத்தியம் பார்த்துக் கொள்ளலாம் பொதுமக்கள். இரண்டு வழிகளிலும் சம்பாதித்துக் கொள்ளலாம் ஒப்பந்ததாரர்கள்.
*****
            ஒவ்வொரு நலத்திட்டத்துக்குப் பின்னும் சுமாராய் இருக்கும் அரசியல்வாதிகள் கோடீஸ்வரர்களாகி விடுகிறார்கள்! பாவம்! நடுத்தரமாய் இருக்கும் மக்கள்தான் நடுத்தெருவுக்கு வந்து விடுகிறார்கள்!
*****
            நமக்கு வேலைவாய்ப்பு, நிவாரணம், காவிரி நீர், அடிப்படை வசதிகள் என்று எதுதான் நமக்கு சரியான நேரத்தில் கிடைக்கிறது சொல்லுங்கள்! எல்லாவற்றிலும் ஒரு தாமதம் இருக்கத்தான் செய்கிறது. அதனால்தான் என்னவோ இந்த வருடம் தென்மேற்குப் பருவக்காற்றும் தாமதமாகத்தான் துவங்குமாம்!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...