19 May 2019

காந்தியடிகள் கண்ட கல்வி!



            ஸ்மார்ட் போன் எனப்படும் டச் போனில் எல்லாவற்றையும் எளிமையாகத்தான் அமைத்திருக்கிறார்கள். அதில் குழந்தைகள் புகுந்து புறப்படுவதையும், பெரியவர்கள் புக முடியாமல் தடுமாறி நிற்பதைப் பார்க்கும் போதுதான் தலைமுறை இடைவெளி என்றால் என்னவென்று புரிகிறது.
*****
            காந்தியடிகள் கல்வி என்பதை உடல், உள்ளம், ஆன்மாவின் வளர்ச்சி என்பார். நிலைமையைப் பாருங்கள் கல்வி கற்றவர்களின் உடல் சுகர், பி.பி., கொலஸ்ட்ரால் என்று அவதிப்பட, உள்ளம் மனநல மருத்துவர்களிடம் மருத்துவம் பெற, ஆன்மா அவர்களை மனசாட்சி அற்றவர்களாக ஆக்கி விட்டது. காந்தியடிகள் கனவு கண்ட இந்தியாவில் கல்வி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டார்கள். நீங்கள் வேண்டுமானால் போய் பாருங்கள் மருத்துவமனைகளில் எவ்வளவு சுகர் பேஷண்டுகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் விசாரணை மற்றும் காவல் மன்றங்களில் எவ்வளவு மனசாட்சி அற்றவர்கள் என்று.
*****
            வேலைவாய்ப்பின்மைக்குக் காரணம் சரியாகப் படிக்காத இளைஞர்களா? அவர்களுக்கு சரியான கல்வியை வழங்காத கல்வி நிறுவனங்களா? என்று என்னிடம் கேட்டார்கள். நான் என்ன சொல்லியிருப்பேன் என்று உங்களுக்குத் தெரியாதா என்ன? வேலைவாய்ப்பின்மைக்குக் காரணம் போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காதுதான் இல்லையா!
*****
            இந்த ஆண்டில் கணிசமாக வாகன விற்பனை குறைந்திருக்கிறது. இது பொருளாதார தேக்க நிலையை உருவாக்கி விடுமே என்று அபயக் குரல்கள் கேட்க ஆரம்பித்து விட்டது. அடுத்த ஆண்டு வாகன விற்பனை உச்சத்தை எட்டி விடும். அப்போது சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற அபயக் குரல் ஒலிக்க ஆரம்பித்து விடும். எனக்கென்னவோ எது நடந்தாலும் அதற்கேற்ப ஓர் அபயக் குரலைத் தயார் நிலையில் வைத்திருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. செயல்பாடு என்று எடுத்துக் கொண்டால் சுத்த பூஜ்யத்தைத்தான் எல்லாவற்றிலும் மெயின்டெய்ன் செய்கிறார்கள். தட் இஸ் ஜீரோ பேலன்ஸ் அக்கவுன்டபிலிட்டி.
*****
            நாக்கால் என்ன செய்ய முடியும்? என்றா கேட்கிறீர்கள்! மேற்கு வங்கத்தைப் பாருங்கள். தேர்தல் பிரச்சாரத்தையே ஒரு நாளுக்கு முன்னதாக நிறுத்தி வைக்கும் அளவுக்கு செய்து விட்டார்கள். தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய ஒரு நாளே இருக்கும் நிலையில் அந்த ஒரு நாளுக்குப் பிரச்சாரத்தை அனுமதித்தால்... என்னவாகுமோ என்ற அளவுக்கு நாக்கைச் சுழற்றி விட்டார்கள் நம் மாண்புமிகு தலைவர் பெருமக்கள்!
            யாகாவர் ஆயினும்... என்று எல்லாருக்கும் சேர்த்துதான் என்றாலும் வெகு குறிப்பாக இக்குறளை அரசியல்வாதிகளுக்காகவே எழுதி இருப்பார் போலிருக்கிறது வள்ளுவர். இந்தியா முழுவதும் எல்லா பொது இடங்களிலும் எழுதி வைக்கலாம்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...