17 May 2019

காக்கையின் ஜென் தன்மை



            காக்கையிடம் நான் ஜென் தன்மையைக் காண்பதற்கு முன்னோர்கள் காக்கையின் வடிவில் வருவது கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்!
*****
            கோயில்களைப் பார்த்ததும் அசுத்தம் செய்ய ஆரம்பித்து விடுபவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? சுத்தம் தெய்வீக இயல்பு. அசுத்தம்தான் மனித இயல்பு.
*****
            பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு, நீட் தேர்வுக்குப் படிப்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? அதை விட்டால் வேறு தேர்வும் இல்லை, வேறு வாழ்க்கையும் இல்லை என்பது போல படித்துக் கொண்டிருப்பார்கள். அப்படித்தான் பேசிக் கொண்டும் இருப்பார்கள்.
            தேர்வுக் காலத்தில் வந்ததால் என்னவோ தேர்தலில் நிற்கும் தலைவர்களுக்கும் அதே போன்ற ஒரு மனநிலை தொற்றி விட்டதோ என்னவோ! இந்தத் தேர்தலை விட்டால் அடுத்தத் தேர்தலே இல்லை என்பது போல தரை லோக்கலுக்கு இறங்கி விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள். அது சரி! எவ்வளவு கேவலமாக விமர்சிக்க முடியுமோ அவ்வளவு கேவலமாக இந்தத் தேர்தலிலே விமர்சித்து முடித்து விட்டால் அடுத்தடுத்த தேர்தலுக்கு அவர்கள் என்ன செய்வார்கள்?!
*****
            பசித்த வயிறோடு யாரும் அறிஞராய் இருத்தல் இயலாது என்பது ஆங்கிலப் பழமொழி என்றார்கள். சரிதான்! இதற்கு நிகரான தமிழ்ப் பழமொழி என்னவென்றால் அறிஞர்கள் எல்லாரும் பசித்த வயிறோடுதான் இருந்திருக்கிறார்கள்! ஒரே பழமொழி தமிழுக்கும், ஆங்கிலத்துக்கும் என்னமாய் வேறுபடுகிறது பாருங்கள்!
*****
            சொன்னால் நம்ப மாட்டீர்கள் என்றவரிடம் நம்பும்படி சொல்லித் தொலையுங்கள் என்றேன். ஆள் கப் சிப். புறணி பேசுபவர்களை இப்படிதான் பொடணியில் அடிக்க வேண்டியதாக இருக்கிறது. சாரி பாஸ்!
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...