14 May 2019

தடை அதை உடை!



            கடைக்குப் போகும் போது துணிப் பையை எடுத்துக் கொண்டு செல்லுங்கள்!
            நல்லது!
            எடுத்துச் செல்வோம்!
            100 கிராம் வெந்தாயம்,
            150 கிராம் சீரகம்,
            அரை கிலோ மிளகாய்,
            அரை கிலோ மல்லி,
            100 கிராம் மஞ்சள்,
            ஒரு கிலோ சீனி,
            அரை கிலோ சர்க்கரை,
            150 கிராம் சேமியா,
            50 கிராம் முந்திரி,
            100 கிராம் திராட்சை,
            ஒரு கடலை மிட்டாய் பாக்கெட்,
            ஒரு பிஸ்கெட் பாக்கெட் என்று எதை வாங்கினாலும் பாலிதீன் பையில் பேச் செய்திருப்பதை எடுத்து, துணிப் பை எடுத்து வந்ததற்காகப் பாராட்டி அதில், போட்டுத் தருகிறார்கள்.
*****
            பாலிதீனைப் பயன்படுத்தினால் அபராதம் என்கிறார்கள். பாலிதீன்கள் தயாராகிக் கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு ஏன் பாலிதீனைத் தயார் செய்கின்ற கம்பெனிகளை தடை பண்ணவோ, சீல் வைக்கவோ கூடாது? அப்படிச் செய்யலாம்தான். அப்படிச் செய்தால் பாலிதீன் பயன்பாட்டுக்கு அபராதம் போட முடியாமல் போய் விடலாம்!
*****
            வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்து விட்டு குடிக்கக் கூடாது என்று பிரச்சாரம் செய்வதும்,
            சிகரெட் உற்பத்தியைத் தடை செய்யாமல் புகைப் பிடிப்பது புற்றுநோயை உருவாக்கும் என எச்சரிக்கை செய்வதும்,
            பாலிதீன் உற்பத்திக்கு தடை விதிக்காமல் அதன் பயன்பாட்டுக்கு அபராதம் விதிப்பதும் எல்லாம் ஒன்றுதான்.
*****
            தடை விதிப்பதன் மூலம் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து விடுமா என்றால்...
            குட்காவைத் தடை செய்தார்கள். கடைசியில் என்ன நடந்தது?
            தடை செய்யப்பட்ட ஐட்டங்கள் கூடுதல் விலையில் சந்தையில் விற்பனை ஆயின.
            பாலிதீன் விவகாரத்திலும் அப்படித்தான் நடப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள் ஐம்பது காசாக இருந்த கேரி பையை ஒரு ரூபாய் கொடுத்து வாங்குவதாக!
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...