13 May 2019

பந்தயத்துப் பணயக் காய்கள்


ந்தயத்துப் பணயக் காய்கள்
தோற்கடித்துத் தோற்கடித்துச் செல்கிறது
முந்திச் செல்லும் வாகனங்கள்
ஒவ்வொரு வாகனத்திலும்
வேகத்துக்கான ஒரு கோடிச் சக்கரங்கள்
பறக்கும் இயந்திரப் பறவைகள்
மோதிக் கொள்வது விபத்தாகப் பார்க்கப்படுகிறது
கருநிற தார்ச்சாலை சிவப்பு நிறமாகப் படரும் போது
பரவசம் கொண்ட உடலுக்கும்
பரவசமற்ற உயிருக்கும் இடையிலோன
ரகசியத்தை நீங்கள் உணருவீர்கள்
ஒரு ஐந்து நிமிடத்தால் குடி முழுகி விடாது
என்று சொல்லிக் கொண்டே
ஐந்து நிமிடத்தை மிச்சப்படுத்தும்
உள்ளுறைந்த இலட்சியத்தையும்
காசுக்காய் உருட்டி மிரட்டப்படும்
பந்தயத்தின் பணயக் காய்களாய்த்
தாங்கள் இருப்பதையும்
யாரும் அறிய மாட்டார்கள்
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...