12 May 2019

வீட்டுக்கொருவர் மரத்தை வெட்டாமல் இருப்போம்!



            தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்களின் நிலைமையோடு, ஆசிரியர் படிப்புக்குப் படித்தவர்களின் நிலைமையையும் யோசித்துப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
            ஆசிரியர் படிப்புக்குப் படித்தவர்களுக்குத் தகுதித் தேர்வு.
            சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குத் தகுதி நீக்கத் தேர்வு.
*****
            எவ்வளவு பணம் இருந்தாலும் கொடுக்கின்ற மனசு ஏ.டி.எம். மிஷின்களுக்குத்தான் இருக்கிறது.
            அதனாலதான் கொடுக்குற மனசுள்ள ஏ.டி.எம். மிஷின்களை ஏ.சி. ரூம்ல வெச்சிருக்காங்க போல!
*****
            சிலருடைய பேச்சாகட்டும், செயலாகட்டும் அவர்களுக்குத் தரம் உயர்த்துவதை விட தரம் தாழ்த்துவதே முக்கியமாகப் படும் போலிருக்கிறது. அதைக் கீழ்த்தரம் என்று சொல்லி நாமாவது அவர்களைத் தரம் தாழ்த்தாமல் இருக்க முயற்சிக்கலாம்.
*****
            மனுஷப் பயல் இருந்தா ஓர் அணிலாவது வீட்டுப் பக்கம் வருதா? அந்தப் பயல் வீட்டைப் பூட்டிட்டு வெளியில போயிட்டு வருவதற்குள் என்னமா வீட்டுக்குள் வந்து விளையாடிட்டுப் போகுது!
*****
            வீட்டுக்கொரு மரம் வளர்ப்பதை விட, வீட்டுக்கொருவர் மரத்தை வெட்டாமல் இருந்தாலே போதும்! அடங் கொய்யாலே! மரத்தை வெட்டிகிட்டே போயிட்டு இருக்கிறதாலதாம்லே மரத்தை வளர்த்துகிட்டு வாங்கன்னு சொல்ல வேண்டியிருக்கு! ஏம்லே இந்தப் பூமியில இருக்கிற மரங்களை மனுஷங்களைத் தவிர யாரு வெட்டுறாங்க சொல்லுங்க? இவங்க வெட்டாம இருந்தாலே போதும்லே! மரத்தை வளர்க்க வேண்டிய அவசியமே இல்லே!
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...