10 May 2019

எக்ஸ்-ரேயில் எலும்புகளின் அழகு



            யாகாவர் ஆயினும் நா காக்க! என்கிறார் வள்ளுவர். அது எவ்வளவு கஷ்டம் என்பது தேர்தல் பரப்புரைகளைப் பார்க்கும் போது ரொம்ப நன்றாகவேப் ‍தெரிகிறது. பாவம் தலைவர்கள் இந்தத் தேர்தலில் நா காக்க ரொம்பவே கஷ்டப்படுகிறார்கள். நாட்டைக் காப்பது கூட எளிதுதான் போலிருக்கிறது. நாக்கைக் காப்பதுதான் ரொம்ப கஷ்டம் போலிருக்கிறது.
*****
            நாக்கிலிருந்து இப்படியா வண்டை வண்டையாக வந்து விழும்? தேர்தல் முடிவதற்குள் தலைவர்களின் நாக்கு நான்கு அடி நீளத்துக்கு நீண்டு விடும் போலிருக்கிறது. நான்கடி நாக்கிலிருந்து வந்து விழும் வார்த்தைகளைக் கேட்கும் போது நிஜமான தூய்மை இந்தியா துவங்கப்பட வேண்டியது நாவிலிருந்துதான் இல்லையா!
*****
            மழை நீரைச் சேமிப்பதை விட மழை வேண்டி யாகம் செய்வது எளிதாக இருக்கிறது. மழையும் பனைமரத்தில் விழுந்து பற்றி எரியும் அளவுக்கு அல்லவா பெய்கிறது! காவிரியில் தண்ணீர் வருவதற்கும், மேட்டூர் ‍அணை நிரம்புவதற்கும் வருங்காலத்தில் யாகங்கள் நியூபார்ன் பேபியாகப் பிறப்பெடுத்து வளர்ந்து வரலாம்.
*****
            எப்படியும் இன்னும் சில பல ஆண்டுகளில் தமிழர்களின் பன்மொழி மொழிபெயர்ப்பு திறன் வானளாவ உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒரே படத்தை ஹாலிவுட்டில் பார்க்கிறார்கள், கொரியன் சினிமாவில் பார்க்கிறார்கள், ஈரானிய சினிமாவில் பார்க்கிறார்கள். அப்புறம் தமிழிலும் ரீமேக்கிலோ, காப்பி மேக்கிலோ பார்க்கிறார்கள். மொழிபெயர்ப்பு திறனில் தமிழர்கள் பிய்த்துக் கொண்டு பறக்கிறார்களா இல்லையா என்று பொறுத்திருந்து பாருங்கள்!
*****
            எக்ஸ்-ரேயில் எலும்புகளின் அழகைப் பார்த்து இருக்கிறீர்களா? எல்லாருக்கும் ஒரே மாதிரி அழகாகத்தான் இருக்கிறது. சமத்துவம்! சமத்துவம்!
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...