16 Apr 2019

புரட்சிகளின் உண்மையான முகம்



            இந்தியாவில் பசுமைப் புரட்சி, நீலப் புரட்சி, வெண்மைப் புரட்சி மகத்தான மாற்றங்களை உண்டாக்கி விட்டதாகச் சொல்கிறார்கள். அப்படித்தான் நிகழ்ந்து விட்டது. ஆனால் மக்கள்...?
            இந்தப் புரட்சிகளெல்லாம் நடக்காத கால கட்டங்களில் ஒரு விவசாயி தன் மகனை விவசாயியாக இருப்பதில் பெருமிதம் கொண்டார்.
            ஆடு, மாடு மேய்க்கும் ஒரு பாட்டாளி தம் சந்ததியினர் அப்படி இருப்பதில் பெருமகிழ்வு கொண்டார்.
            ஒரு மீனவர் தம் மகனை மீனவராக இருப்பதில் நிறைவு கண்டார்.
            இந்தப் புரட்சிகளெல்லாம் நடந்து முடிந்த பிறகு,
            ஒரு விவசாயி தன் மகன் தன்னைப் போல் ஒரு விவசாயியாக இருந்து கடன் வாங்கிக் கட்ட முடியாமல் நாண்டுகிட்டோ அல்லது பூச்சிமருந்தைக் குடித்து விட்டு பரலோகமோ போய் விடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்.
            படிச்சுப் பாழாப் போவுறதை விட ஆடு மேய்ச்சு ஆளாப் போகலாம் என்ற தன்னம்பிக்கையில் இருந்தவர்கள் காசைக் கொட்டிப் படிக்க வைத்து பராரியாய் போய் வேலை கிடைக்காமல் திரிந்தாலும் பரவாயில்லை என்று ஆடு, மாடுகள் பராமரித்துத் தொழில் செய்வதைக் கேவலமாக நினைக்கிறார்.
            எந்த நேரத்தில் எப்போது எந்த நாட்டு பட்டாளத்தான் சுட்டுக் கொல்வானோ? என்ற பீதியில் மீனவர் தம் மகனை மீனவராக ஆக்குவதற்கு அஞ்சுகிறார்.
            புரட்சி வெற்றி பெற்று விட்டது. மக்கள் தோற்று விட்டனர்.
            ஆபரேஷன்ல கிங்கு! ஆனா, பேஷண்டுக்கு சங்கு!
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...