"ஏம் மச்சாம்! இப்படி ஆளாளுக்கு பணம்
கொடுத்தா யாருக்குதேம் ஓட்டுப் போடறது?" என்கிறார் தெற்குத் தெருவுக்கு மருமகனாய்
வந்திருக்கும் செம்பைய்யா.
"பணத்தையெல்லாம் வாங்கிட்டு பணம்
கொடுக்காம்மே இருக்குறவ்ய்களுக்குதேம் ஓட்டுப் போடுணும் மச்சாம்!" என்கிறார்
நடுத்தெரு பாண்டிமுத்து.
"ரெண்டாயிரத்த இப்புடி பயப்புள்ளீக
சல்லிசுக்காசு ஆக்கிப்புட்டாங்க மச்சாம்! நல்லவேள மச்சாம்! அய்யாயிரம் நோட்ட வுடாம
இருந்துட்டாவோ. இல்லேன்னா மச்சாம்! அய்யாயிரம் நோட்டுதேம் றெக்க கட்டிகிட்டுப் பறக்குது?"
"ஏம் மச்சாம்! அப்போ ஆறெழு மாசத்துக்கு
முன்னாடி பேங்குல பணம் இல்லேம்னு வெரட்டி வுட்டாவுகளே! நெனவிருக்கா? இப்போ இப்படி
பணம் ரவுண்டு கட்டி அடிக்குதே! அப்போ ல்லாத பணம் இப்போ எங்க வந்திச்சு? ல்லே, இது
அப்போ இப்படி ரவுண்டு கட்டி அடிக்கிறதுக்காக போயிட்டு இருந்த பணமா? ஒண்ணுமே புரியலியே
மச்சாம்!"
"அதேங் மச்சாம்! அப்போயே பாடிபுட்டாம்!
காடு வெளஞ்சென்ன மச்சாம்! நமக்கு கையும் காலுந்தேம் மிச்சம்னு! பணம் வெளஞ்சென்ன மச்சாம்!
நமக்கு எலும்பும் தோலுந்தேம் மிச்சம்!"
"ரெண்டாயிரம்னே வெச்சிகிட்டாலும்
அஞ்ச வருஷத்துக்கு ஒரு நா மேனிக்குக் கணக்குப் போட்டுப் பாத்தா ஒரு ரூவா சொச்சம்
தேறாது மச்சாம்!"
"இந்த ஒத்த ரூவாய்க்கா மச்சாம்! சனம்
அப்படி கெடந்து அடிச்சுக்குது?"
"சனம் எத விரும்புதோ அதக் கொடுத்துதாம்
மச்சாம் ஓட்ட வாங்குறாம்! அதாங் பணத்தக் கொடுத்தா ஓட்டுன்னு அதக் கொடுக்குறாம். நல்லத
செஞ்சத்தாம் ஓட்டுன்னு இந்த சனம் நின்னுபுட்டா? அதாவது மச்சாம்! இந்தச் சனம் நல்லத
செஞ்சாத்தாம் ஓட்டுன்னு சொல்லிபுட்டா அதத்தான மச்சாம் செஞ்சு ஓட்ட வாங்குவாய்ங்க!"
"எதக் கொடுத்தா ஓட்டுக் கெடைக்குமோ
அதச் செய்ய அவம் தயாராத்தாம் இருக்காம் மச்சாம்! இந்தச் சனம்தாம் நல்லத கொடுத்தாதாம்
ஓட்டுக் கெடைக்கும்ங்றதுல நிலையா நிக்கணும்!"
"நிக்கணும் மச்சாம்! நீ நாலு பேருட்ட
பேசு. நாம்ம நாலு பேருட்ட பேசுறம். ஓட்டுக்கு நோட்டு கேக்கறத மாத்தி, நாட்டுக்கு நல்லத
கேக்கணும் மச்சாம்!"
*****
No comments:
Post a Comment