20 Apr 2019

மரணம் வழங்கும் பிதாக்கள்



பூச்செடிகளின் மேல் ஏறிச் சென்ற
போர் வாகனத்தை
காறித் துப்ப வேண்டும்
குழந்தையின் கன்னக் குழியில் வெடித்த
இயந்திரத் துப்பாக்கியை
ச்சீ ச்சீ ச்சீ என இழிவு செய்ய வேண்டும்
கேளிக்கை மைதானங்களில் புதைக்கப்பட்ட
கண்ணி வெடிகளை
சீக்குச் சிந்தனைப் பிடித்தவர்களின்
மண்டையோட்டில் புதைக்க வேண்டும்
பள்ளம் நோக்கி விழுந்து கொண்டிருக்கும்
குரல் கேட்கிறதா
கேட்க முடியாத வெகு ஆழத்துக்குச் சென்று விட்டதா
வெடிப்புகளின் ஒலியில்
தீனக் குரலாய் அழியப் போகிறதா
செவியறுந்து விழுந்து விட்டது என்றால்
வைக்கப்பட்ட கோரிக்கைக் குரலுக்காக
மன்னிப்பும் மரணமும் வழங்கப்படுவதாக
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...