8 Apr 2019

அரசியல் வன்கொடுமைகள்



            அரசுத் துறையோ, தனியார் துறையோ பணியாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் ஓய்வு கொடுத்து விடுகிறார்கள். தனியார் துறை நிறுவனர்களும் கூட ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் தொடர்ந்து நிறுவனத்தின் செயல் தலைவராக இருந்து கொண்டு படுத்தி எடுக்காமல் நிறுவனத்தின் வழிகாட்டிகளாக, ஆலோசகர்களாக மாறிக் கொள்கிறார்கள்.
            செயல்திறனுக்கு ஒரு குறிப்பிட்ட வயது இருக்கிறது. அந்த குறிப்பிட்ட வயதுக்கு மேல் அவர்கள் ஆலோசர்களாகவும், வழிகாட்டிகளாகவும் செயல்படுவதே சரியானது. அதுவும் அல்லாமல் முதுமைக்கு ஓய்வு கொடுக்காமல் படுத்தி எடுப்பதும் ஒருவகை வன்கொடுமையே.
            இத்தகைய வன்கொடுமை இப்போது அரசியலில் மிக அதிகமாகவே நடக்கிறது. அறுபது எழுபது வயதுக்கு மேல் உள்ளவர்கள் தலைவர்களாக நீடித்துத் தங்களைத் தாங்களே சித்திரவதைச் செய்து கொள்கிறார்கள். அந்த வயதில் ஒருவருக்குத் தேவை ஓய்வன்றி வேறென்னவாக இருக்க முடியும்? அதுவும் அந்த வயதுகளில் சர்க்கரை, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் என்று இருந்து விட்டால் சொல்லவே தேவையில்லை, அவருக்குத் தன்னைக் கவனித்துக் கொள்வதே ஒரு பெரும்பாடாக இருக்கும். அவர் தன்னையும் பெரும்பாட்டுடன் கவனித்துக் கொண்டு, செயல்திறன் தேவையான பதவியிலும் நீடித்தால் நிலைமை எப்படி இருக்கும்?
            எல்லாவற்றுக்கும் ஒரு வயது நிர்ணயம் இருக்கும் போது அரசியலிலும் செயல்திறன் மிக்க பொறுப்புகளையும், பதவிகளையும் வகிப்பதற்கும் வயது நிர்ணயம் இருக்க வேண்டும்.
            அரசியல் விழிப்புணர்வுதான் எவ்வளவோ வன்கொடுமைகளைப் போராடி மாற்றியிருக்கிறது. அப்படி இருக்கும் போது அந்த அரசியலிலேயே முதுமைக்கான ஓய்வு இல்லாமல் நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள் இருப்பது எந்த அளவுக்குப் பொருத்தமாக இருக்கும்?
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...