6 Apr 2019

ஆடுகளின் வானம்


ஆடுகளின் வானம்
உயிர் பிரிந்துப் போன
வெள்ளாட்டுக் குட்டி
வெள்ளை நிறத்தை வானம் முழுவதும்
தூவி விட்டிருக்கிறது
கிடாச்சோறுக்குப் போதாது எனப் பலியான
கறுப்பு ஆட்டுக்குட்டியின்
கருப்பு நிறம்
மேகங்களாய் அலைந்து கலைகிறது
அய்யானருக்குக் கொடை கொடுத்த
கிடாக்களின் இரத்தச் சிவப்பு
அந்தி வானமாய்ச் சிதறுகிறது
சரிதான்
செத்துப் போன ஆடுகளை
வானம் பிடித்து வைத்துக் கொள்கிறது
கொன்றால் பாவம் தின்றால் போச்சு
கொல்லும் பாவம் வானுக்குப் போச்சு
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...