பாதிச் செத்த உடலின் குரல்
ஏறிச்
சென்ற ஊர்திக்கு இரக்கமில்லை
பாதிச்
சாகடித்துச் சென்று விட்டது
வலியைப்
பாதி மிச்சம் வைக்க முடியாமல்
கண்ணீரைப்
பாதிக் குறைத்துக் கொள்ள முடியாமல்
உயிர்
வாதையின் அரைப் பாகத்தை
உதறித்
தள்ள முடியாமல்
இரண்டு
மடங்காய்க் கத்துபவனின் குரல்
வெளியெங்கும்
நிறைகிறது
இரவு
இயல்பாய் வருகிறது
நிலவு
எட்டிப் பார்க்கிறது
நட்சத்திரங்கள்
நாசுக்காய்ப் பூக்கின்றன
இன்னும்
பாதிச் சாகடிக்க வரும்
ஊர்திக்காகக்
காத்திருக்கிறது உடல்
வேதனைப்
புரியாத உயிர்
பிழைத்து
விடும் சாமர்த்தியத்தினாலான
நம்பிக்கையின்
சிற்றிழையால்
பெருஞ்சுமைத்
தூக்கி விடத் துடிக்கிறது
*****
No comments:
Post a Comment