நாக்குத் தொங்கிய நாய்
பசியார
வந்த வயிறு
வயிற்றை
அறுத்து ருசியாக்கி விட்டாய்
கண்ணாரக்
காண வந்த கண்கள்
கண்களைக்
குத்திப் பார்த்து விட்டாய்
நெஞ்சார
தழுவ வந்த கரங்கள்
கரங்களை
வெட்டிக் கட்டிக் கொண்டு விட்டாய்
புதைத்தாலும்
முளைக்கும்
எரித்தாலும்
புகையாய்ப் பிறக்கும்
வன்மங்களுடன்
பிறந்த விட்டாய்
இறப்பைப்
பரிகாசம் செய்யும் வாய் உனக்கு
உன்
கால்கள் எட்டி உதைக்கும் நாய் என்றானப் பின்
நாயின்
நான்கு கால்களால் செய்த சூப்பை
நன்றாய்க்
குடிப்பாய்
ஆட்டுவதற்கு
வாலை மட்டும் மிச்சம் வை
அனிச்சையாய்
ஆட்டிப் பழகி
ஆடப்
பழகி விட்ட காலற்ற நடனங்களைக்
குசும்புடன்
ரசித்துப் பார்ப்பாய்
குரைப்பதற்கான
குரல்வளை உன்னிடம் இருக்கிறது
நாக்குத்
தொங்கி விட்ட நாய் நான்
*****
No comments:
Post a Comment