ஆயுத அரசியல்
இன்னொரு கவிதை எழுதுவதற்கு
முன்
துப்பாக்கிகள் நீட்டப்படுகின்றன
வெடிகுண்டை விட மிக மோசமாக
வெடிக்கும் உண்மைக்காகப்
பீரங்கிகள் பம்மிப் பதுங்குகின்றன
ஏவுகணைத் தாக்குதலுக்குத்
தயாராகும் கரங்கள்
ஜனநாயகத் தோல்விக்கு அஞ்சுகின்றன
எல்லாரையும் அழித்து விட்டால்
எவரை ஆள முடியும் என
அணுகுண்டுகள் அலறுகின்றன
மிரட்டத்தான் ஆயுதங்கள்
வியாபாரம் முடிந்து விட்டால்
பின்வாங்கிக் கொள்ளும்
ஆயுத பேரங்கள் சண்டையை மூட்டி
சமாதானங்கள் செய்கின்றன
சமாதானங்கள் செய்யா விட்டால்
மறுசண்டைக்கான ஆயுத பேரங்கள்
மரணித்துப் போய் விடலாம்
*****
No comments:
Post a Comment