ஜனநாயகத் திருவிழா
கேட்டால்
கார்ப்பரேட் கவர்னன்ஸ் என்கிறார்கள். அதற்காக இவ்வளவு சாமர்த்தியமாகவா வாக்குகளை விலைக்கு
வாங்குவது?!
*****
கட்டுக் கட்டாக,
பெட்டிப் பெட்டியாக பணம்! தேர்தல் நேரம் என்றால் ஸ்பெஷலாக பணத்தை அச்சிடுவார்களா என்று
யாராவது சந்தேகம் கேட்டால் என்ன பதில் சொல்வது என்று நீங்களே சொல்லி விடுங்கள்.
*****
வியாபாரம்
செய்ய வந்த ஆங்கிலேயர் அரசியல் செய்தார்கள் என்றால் அரசியல் செய்ய வந்து ஓட்டுகளை நோட்டுகளுக்கு
விலைக்கு வாங்கும் இவர்கள் செய்வதற்குப் பெயர் என்னவோ?
*****
இந்தியாவில்
ஓட்டுகளை நோட்டுகளுக்கு விற்பது குறித்துக் கூட கவலையில்லை. இதைப் பார்த்து அமெரிக்கா,
இங்கிலாந்து போன்ற வெளிநாடுகள் கெட்டுப் போய் விடுமோ என்று கலங்கி நிற்கும் ஊர்
பெருசுகளைப் பற்றி என்ன நினைப்பது? என்ன செய்வது?
*****
தனிக்குடித்தனம்
போன பெரியண்ணனின் ஒற்றை மகன் இந்த வருஷம் பதினெட்டு வயசுக்கு வருகிறான். இதனால் மூன்று
ஓட்டுக்கு மேல் பணம் வாங்க முடியாது என்பதை நினைத்து ஏக்கப் பெருமூச்சு விடும் பெரியண்ணன்
'நாம் இருவர் நமக்கு ஒருவர்' என்று இருந்தது எவ்ளோ தப்பாப் போச்சு என்று ரொம்பவே
ஆதங்கப்படுகிறார்.
*****
No comments:
Post a Comment