2 Apr 2019

வார்த்தைகள் வன்முறை செய்யும்


வார்த்தைகள் வன்முறை செய்யும்
சொற்கள் வழியே பாயும் சுயநலம்
வார்த்தைகள் வழியே வழிய விடும் வன்மம்
அடித்துத் துவைத்துப் போடும் அதிகார மிரட்டல்கள்
உச்சாப் போக வைக்கும் பயமுறுத்தும் உறுமல்கள்
மொழிக்கும் பாகுபாடு உண்டு
விளிம்புநிலை அதிகாரம் பேசாது
அதிகாரம் பணிவு பேசாது
மகளிரை வார்த்தைப் புணர்ச்சி செய்யும்
குழந்தைகளின் காதில் துப்பாக்கிக் கீதம் பாடும்
சவடால் மொழிகளை சவால் மொழிகளாய்
ஏமாந்த எங்களுக்காக
மொழி ஒருமுறை மன்னிப்புக் கேட்கட்டும்
வன்மொழிகளைப் பேசியவர்கள்
வன்மையாக ஆசிர்வதிக்கப்படுவார்களாக
ஏனென்று கேட்காதே
இன்று தண்டிப்பவர்கள்
நாளை தண்டிக்கப்படுவார்கள்
தவறாகப் பொருள் கொள்ளாதே
தண்டிக்கப்பட்டது அறிந்தவர்கள்
தண்டிக்க வருவார்கள்
*****

No comments:

Post a Comment

நெல்லுக்கு நல்ல விலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

நெல்லுக்கு நல்ல விலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்? நேற்றைய விவாதத்தை நாம் நெல்லுக்கு நல்ல விலை கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியை எழ...