23 Apr 2019

பணப்பட்டுவாடாவைத் தவிர்க்கும் வழிமுறைகள்



            இந்தப் பணத்தை நினைத்தால் பாவமாக இருக்கிறது! தேர்தல் காலங்களில் சாமர்த்தியமாக ஒளிந்து கொள்ளத் தெரியாமல் மாட்டிக் கொள்கிறது! கஜா புயல் அடித்த பின் எவ்வளவு சாமர்த்தியமாக ஒளிந்து கொண்டு இருந்தது!
*****
            தேர்தலில் பணப் பட்டுவாடாவைத் தவிர்க்க ஏதேனும் வழிகள் இருக்கிறதா? என்று ஆளாளுக்குக் கேட்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலானாலும் சரி, சட்டசபைத் தேர்தல் ஆனாலும் சரி, பாராளுமன்ற தேர்தல் ஆனாலும் சரி ஒருத்தர் இரண்டு முறைக்கு மேல் போட்டியிடக் கூடாது. அதுவும் ஒருத்தர் ஒரு குடும்பத்திலிருந்து இரண்டு முறை தேர்தலில் போட்டியிட்டுப் பதவியடைந்தால் அந்தக் குடும்பத்தின் வாரிசுகள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவே கூடாது. ஆயுசுக்கும் போட்டியிட்டு ஜெயித்து விடலாம் என்ற ஆசையில்தான் பணத்தைப் பதுக்கி வைக்கிறார்கள் என்று ஆளாளுக்குப் லபக்குகிறார்கள்.
*****
            மக்கள் ஒரு முடிவோடுதான் இருக்கிறார்கள். எந்தப் பகுதியில் எல்லாம் தேர்தலுக்குப் பணபட்டுவாடா செய்தவதில் தாமதம் ஏற்பட்டதோ அந்தப் பகுதிகளில் எல்லாம் சாலை மறியல் செய்யும் அளவுக்குப் போய் விட்டார்கள். போராடாமல் எதுவும் கிடைக்காது என்பதை மக்கள் எந்த அளவுக்குப் புரிந்து வைத்திருக்கிறார்கள்!
*****
            தேர்தலில் மிக அதிகமாக பணப்பட்டுவாடா செய்யப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கே முதலிடம் என்கிறார்கள். செந்தமிழ் நாடென்னும் போதினிலே... இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே!
*****
            என்னை ஏன் கட்டாயப்படுத்துகிறீர்கள்? உட்கார முடியாத என்னை ஓட விடுங்கள்!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...