23 Apr 2019

ஞானத்தின் இரண்டாவது 5 சொட்டுகள்!



            இதை எப்படிச் செய்கிறீர்கள்? என்று தயவுசெய்து கேட்காதீர்கள்! நான் எதையும் செய்வதில்லை.
            முக்கியமாக எடுத்தவுடன் நான் எதையும் செய்வதில்லை. எனக்கு எந்தவித அவசரமும் இல்லை. நான் தயாராகிக் கொள்கிறேன். அதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறேன்.
            பிறகு அது தயாராகிறது. அது தயாராகி என்னை விடுவித்து விடுகிறது. அதன் பின் எல்லாம் அதனதன் போக்கில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
            அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை.
*****
            கடைசிக் கவிதை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
            அது மறைவதில்லை.
            அது முளைத்தெழுகிறது என்று சொன்னால் நம்புவீர்களா?
            அந்தக் கடைசிக் கவிதையை எழுதாமல் இருந்திருந்தால் யார் என்னை பிரிந்து சென்றிருப்பார்கள்?
            இப்போது சொல்லுங்கள்! கடைசிக் கவிதை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
*****
            உங்கள் விதிகளும், சட்டங்களும் எனக்குப் புறக்கணிக்கக் கற்றுத் தருகின்றன. எனக்கு ஆதரவான விதிகளும், சட்டங்களும் என்னிடமே இருக்கின்றன. ஆகவே குறுக்கிடாதீர்கள். என் அலறலைப் பொருட்படுத்தாதீர்கள்.
*****
            சந்தோஷமாக இருப்பதானால் இருந்த விட்டுப் போகுங்கள். சொல்லிக் கொடுப்பதற்கு அதில் என்ன இருக்கிறது? கற்றுக் கொள்பவர்கள் சந்தோஷமாக இல்லை என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்?
*****
            நான் மனிதனில்லை என்றால் நான் யார்? தனக்குப் பிடித்தம் இல்லாத மிருகம்! வேட்டையாடும் மனநிலையில் இருக்கும் மிருகத்திடம் அதற்கு மேல் சொல்லாதீர்கள். விசாரணைகளை எதிர்கொள்ளும் பொறுமை மிருகங்களிடம் ஏது?
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...