15 Apr 2019

ஒரு புதிய விளக்கம்!



            "கேப்பையில நெய் வடியுதுன்னா கேக்குறவன் என்னா கேனையனா?" என்ற சொலவடை புரியாமல் சிரமப்பட்ட எம்.கே.வுக்கு அதை எப்படி விளக்குவது என்று தெரியாமல் தடுமாறினார் எஸ்.கே.
            தலையைச் சுற்றியிருக்கும் தோலைப் பலவிதமாகச் சுருக்கி யோசித்தார் எஸ்.கே. அதில் பின்பக்க பிடரி தோல் ரொம்பவே சிலிர்த்துக் கொண்டது.
            "கேப்பைன்னா கட்சிகளோட தேர்தல் அறிக்கை மாதிரி. நெய்யுன்னா அதுல கொடுக்கப்பட்டிருக்கிற வாக்குறுதிகள் மாதிரி." என்றார் எப்படியோ எம்.கே.வுக்கு சொலவடையை விளக்கி விட்ட திருப்தியில் எஸ்.கே.
            "அப்ப கேனையன்கள்னா?" என்று கேட்ட எம்.கே.வுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திருட்டு முழி முழிக்க ஆரம்பித்தார் எஸ்.கே.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...