19 Apr 2019

கல் வீச்சு



ஒன்று என்று எழுதப்பட்டக் கல்லை
எதிரி மீது வீசுங்கள்
இரண்டு என்று எழுதப்பட்டக் கல்லை
சுற்றியிருப்பவர்கள் மீது வீசுங்கள்
மூன்று என்று எழுதப்பட்டக் கல்லை
உறவினர்கள் மீது வீசுங்கள்
நான்கு என்று எழுதப்பட்டக் கல்லை
நண்பர்கள் மீது வீசுங்கள்
ஐந்து என்று எழுதப்பட்டக் கல்லை
உங்களை கை தூக்கி விட்டவர்கள் மீது வீசுங்கள்
ஆறு என்று எழுதப்பட்டக் கல்லை
உங்களை ஆழமாக நேசித்தவர்கள் மீது வீசுங்கள்
ஏழு என்று எழுதப்பட்டக் கல்லை
உங்களை மரணத்திலிருந்து காப்பாற்றியவர் மீது வீசுங்கள்
எண்கள் எழுதப்பட்டக் கற்கள்
ஒவ்வொன்றையும் வீசுங்கள் வீசுங்கள்
வீசிக் கொண்டே இருங்கள்
கடைசி எண் எழுதப்பட்டக் கல்லை
கண்டபடி கல்லெறிந்ததற்காக
உங்கள் மீதே வீசுங்கள்
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...