அண்ணாச்சி கடை தொடங்கி,
ஆன்லைன் கடை வரை வாங்கிய பொருளில் திருப்தி
இல்லை என்றால் திருப்பி அனுப்பும் முறை ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.
அண்ணாச்சியால் சாத்தியமாகின்ற ஒன்று, ஆன்லைனில்
சாத்தியமாகிற ஒன்று அரசியலில் சாத்தியமானால் என்ன?
தேர்ந்தெடுத்த வேட்பாளரின் செயல்பாடுகள்
திருப்தி இல்லையென்றால் அவரைத் திருப்பி அனுப்புவது சாத்தியமானால்தான் என்ன!
ஒரு பொருளைப் பார்த்துப் பார்த்து வாங்குபவர்கள்,
பல இடங்களில் விசாரித்து விசாரித்துத்
தேர்வு செய்பவர்கள்,
பல பேரிடம் பல அபிப்ராயங்களைக் கேட்டு
ஒரு முடிவுக்கு வருபவர்கள் அம்முறையையே ஒரு வேட்பாளரையும் தேர்ந்தெடுத்து வாக்களிப்பதிலும்
கைகொள்ளலாம். அப்படித் தேர்வு செய்யும் போதும்,
நல்ல பிராண்ட் என்று தேர்ந்தெடுத்த ஒரு
நிறுவனத்தில் ஒரே ஒரு பொருள் திருப்தி தராமல் போகும் போது அதைச் சம்பந்தப்பட்ட நிறுவனமே
திரும்பப் பெறுவது போல,
நல்ல கட்சி என்று வாக்காளர்கள் நம்பித்
தேர்ந்தெடுத்த ஒரு கட்சியில் ஒரே ஒரு வேட்பாளர் திருப்தி தராமல் போகும் போது அவரைச்
சம்பந்தப்பட்ட கட்சியே திரும்பப் பெறலாம். அது சம்பந்தப்பட்ட கட்சியின் இதர வேட்பாளர்களுக்கு
சரியாகச் செயல்பட வேண்டும் என்று எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்வதாகவும் இருக்கும்.
ஆக வாக்காளர்களுக்கு தங்கள் பிரதிநிதியைத்
திரும்பப் பெற வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ, கட்சிகளுக்கு அதைச் செய்ய அதிகாரம் இருக்கிறது.
வாக்காளர்கள் தங்கள் தேர்வைச் சரியாகச்
செய்து, கட்சிகளும் தங்கள் அதிகாரத்தைச் சரியாகச் செயல்படுத்தினால் ஜனநாயகத்தின் கரங்கள்
வலுப்படும். அதைச் செய்யாத போது நல்ல தேர்வைச் செய்ய வேண்டும் என்று நினைக்கும் வாக்காளர்களுக்கு
நோட்டாவின் கரங்களை வலுப்படுத்துவதைத் தவிர வேறு என்ன வாய்ப்பு இருக்கிறது?!
*****
No comments:
Post a Comment