22 Apr 2019

5 மினிட் ஞான நூடுல்ஸ்



            நீங்களே பாருங்கள்! வாழ்வெனும் இக்கோப்பை எப்போதும் காலியாக இருக்கிறது! அடியில் ஆசையெனும் ஓட்டை கோப்பையை நிரம்பவே விடுவதில்லை.
*****
            "சர்தாம் போடா!" என்கிறார் தெக்குடு தாத்தா! சரிதான் என்று போகிறார்கள் எதுவும் சொல்லாமல். இதயத்திலிருந்து வரும் வார்த்தைகளுக்குக் கீழ்படிவதைத் தவிர வேறு வழி?!
*****
            மாபெரும் மகான்கள் தங்கள் மனதைக் கொடுக்கத்தான் பிரியப்படுகிறார்கள். நாமோ அவர்களின் உடலை வாங்கி ஜீவசமாதி வைப்பதோடு திருப்தி அடைந்து விடுகிறோம். பாவம் மகான்கள்!
*****
            சாவை அறிவித்து ஆகப் போவதென்ன? அது நிச்சயம் நிகழப் போவது. நிகழ்ந்து விட்டுப் போகட்டும். சொல்லி விட்டு விடைபெற வேண்டும் என்ற சடங்குகள் சாவுக்குப் பொருந்தாது. சாவுக்குச் சடங்குகளே பொருந்தாது.
*****
            இந்தக் கவிதையின் இருண்மை பிடிக்கவில்லை என்றால் நச்சரிக்காதீர்கள்! உங்களுக்குப் பிடித்த கவிதை ஒன்றை பிடிக்காமல் போகும் வரைப் படித்துக் கொண்டே இருங்கள்!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...