18 Mar 2019

Sound of the Nights


இரவின் கனைப்பொலிகள்
இரவின் குதிரையில்
விழிப்பாகப் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது
குதிரை மேல் உறங்கிய நெப்போலியன்
தூக்கத்தை அவுட்சோர்சிங் செய்த
முதல் ஐ.டி.காரன்
இரவுக்குதிரை மூன்று வேளைச்  இரவுச் சாப்பாடு
வேண்டாம் என்றுச் சொல்லி
நின்று கொண்டே தூங்கும்
பகல் நேரத் தூக்கம் வேண்டும் எனப் புலம்பும்
குளம்படி ஓசைகள் இதயத்தில் கேட்கும் போது
ஹார்மோன்கள் தறிகெட்டு ஓடியிருக்கும்
சேணத்தைப் பிடிக்கும் போது
முரண்டு பிடிக்கும் குதிரை
தன் நிழலைக் கண்டே பயப்படும்
வீட்டுக்கு அருகே இருக்கும்
மனநோயாளி லாயத்தில் கட்டப்பட்டிருக்கும்
நிறைய குதிரைகளின் கனைப்பொலிகள்
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...