"என்ன தலைவரே! நறுக் நறுக்னு எழுதுறதை
விட்டுட்டீங்களே!" என்றார் நம் பிளாக்கைப் படிக்கும்(!) அன்பர் அல்லது வாசகர்
அல்லது படிப்பாளர் ஒருவர். இப்படி ஒரு அன்பர்/வாசகர்/படிப்பாளரே கேட்ட பிறகு எழுதாமல்
இருக்க முடியுமா?
இப்போதைக்குக் கொஞ்சம் எழுதித் தள்ளியிருக்கிறேன்.
.....
கடன் வாங்கலாம்
என்று வெளியில் கிளம்பினால், "சார்! லோன் வேணுமா?" என்று பேங்கிலிருந்து
கால் பண்ணிக் கேட்கிறார்கள்!
*****
அரசியல் அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் என்கிறார்கள். அரசியலும் கைவிட்டு விட்டால்
பாவம் அவர்கள் எங்குதான் போவார்கள்?
*****
வாசிப்புப் பழக்கம் குறைந்து விட்டது என்று சொன்னால்... பேஸ்புக்கில்
வாசிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்கிறார்கள். சர்தான்! படிக்காமல் லைக்ஸ்
போடுபவர்களைப் பற்றி என்ன சொல்ல?!
*****
கடையோரமாக வாகனங்களை நிறுத்தி பொதுமக்களுக்கு இடைஞ்சல் பண்ணாதீர்கள்
என்கிறார்கள். வாகனத்தை நிறுத்தும் நான் மட்டும் என்ன அயல் மக்களா? நானும்தான்யா பொதுமக்கள்.
வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்ற மாதிரி கடையைக் கட்டச் சொல்லுங்கப்பா!
*****
என்ன தீர்க்கதரிசனமா இந்தக் காலத்துக் குழந்தைகளைப் பற்றி எழுதியிருக்காங்க
ரெளடி பேபின்னு. அட்டகாசம் தாங்க முடியல சாமி! செல்போனைக் கொடுக்கலைன்னா உம் மூஞ்சுல
எங் பீச்சாங்கைய வைக்கன்னு ன்னா அசால்ட்டா சொல்லுதுங்கோ!
*****
No comments:
Post a Comment