20 Mar 2019

India's Spiritual Gift to the World



            இப்போதெல்லாம் எந்த மேம்பாலத்தில் ஏறினாலும் பயமாகத்தான் இருக்கிறது. மும்பை, மேற்குவங்கம், ஒடிசா என்று  மாநில வாரியாக நடைபெறும் மேம்பால விபத்துகள் மற்றும் இடிபாடுகளைக் கேள்விப்படும் போது தமிழ்நாட்டுக்கும் சீக்கிரமே அந்த நிலை வந்து விடும் போலிருக்கிறது. எதற்கு இவ்வளவு மேம்பாலங்கள்? கான்ட்ராக்ட்காரர்கள் பிழைக்கவா? கேட்டால் டிராபிக்கைச் சமாளிக்க வேண்டும் என்பார்கள்.
            என்ன பெரிய டிராபிக்கைச் சமாளித்து விட்டார்கள்? பக்கத்தில் இருக்கும் கடைக்கு நான்கு சுற்று சுற்றிப் போக வேண்டியிருக்கிறது? எவ்வளவு எரிபொருள் வீணாகிறது தெரியுமா?
            வேலை பார்க்கும் இடத்துக்கு அருகே குடியிருப்புகள், குடியிருப்புகள் அருகே தேவையான பொருட்களை வாங்குவதற்கான அங்காடிகள், குடியிருப்புகளுக்கு அருகிலேயே அடிப்படைத் தேவைகள் நிறைவேறுவதற்கான வள மையங்கள் என்று இதை வேறு விதமாகச் சிந்தித்துச் சரி செய்யலாம்.
            எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப் பொதுப் போக்குவரத்தை எவ்வளவு துல்லியமாகச் சரி செய்யலாம்! இரண்டு பேராகப் போனால் இருசக்கர வாகனத்தில் செல்வதே மிச்சம் என்ற வகையிலா பொதுப் போக்குவரத்தின் டிக்கெட் கட்டணங்கள் இருக்க வேண்டும்?
            அந்தப் பொதுப்போக்குவரத்தில்தான் போக முடிகிறதா? அவ்வளவு மெதுவாக, உடைந்தத் தகரங்கள், கிழிந்து நைந்து போன அழுக்குப் பிடித்த இருக்கைகள், ஏதோ இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த குடோனிலிருந்து எடுத்து வரப்பட்டது போல ஒட்டடைகள் என்று பொதுப்போக்குவரத்து நகர்வதைப் பார்க்கையில் திட்டமிட்டே பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கக் கூடாது என்று ஏதோ சூன்யம் வைத்ததைப் போலத்தான் தெரிகிறது. இதையும் சமாளித்துப் பொதுமக்கள் பொதுப்போக்குவரத்தில் போகிறார்கள் என்றால் அது இந்தியாவின் பொறுமையைக் குறிக்கும். ஆம்! இந்தியா தனது பொறுமையால் இன்னும் பல ஞானங்களை இந்த உலகுக்கு அளிக்கும்.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...