21 Mar 2019

Mini Meals - Today's Special



            கடுமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் போது பாதிக்கப்படுவது அதில் சம்பந்தப்பட்டவரின் இதயம்தான். கட்டிப்பிடி வைத்தியம் பலனளிப்பது இந்த இடத்தில்தான். அப்போது இதயம் கொஞ்சம் இலகுவாகிறது. கடுமையைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. உலகில் மிகக் கடினமான காரியங்களுள் ஒன்று கடினமான மனநிலையிலிருந்து வெளியே வருவது. எளிமையான மனநிலையில் இருப்பது எளிதானதல்ல. அது அசாதாரணம்.
*****
            தேர்தல் வந்தால் எவ்வளவு கர்ண பிரபுக்களைப் பார்க்க முடிகிறது, வாக்குறுதிகளை வாரி வாரி வழங்குகையில்!
*****
            இந்த முறையும் பாருங்கள்! பெரும்பாலான கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி இடம் பெற்றிருக்கிறது. ஆட்சியைப் பிடித்தவுடன் அந்த வாக்குறுதியைத் தள்ளுபடி செய்து விடுவார்கள்!
*****
            சந்தர்ப்பவாத கூட்டணிகளை எப்படி முறியடிப்பது என்பது ரொம்ப நாள் யோசனை. சந்தர்ப்பவாதிகளாய் இருந்து முறியடிப்பதை விட வேறு ஏதேனும் வழி இருக்குமோ!
*****
            ஒரு நடிகனை சினிமாவுல டபுள் ஆக்ட் பண்ண விடுறீங்க! கூட்டணி பேசுறப்ப‍ மட்டும் அனுமதிக்க மாட்டேங்றீங்களேப்பா!
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...