22 Mar 2019

Method of 100% Voting in Elections


Method of 100% Voting in Elections
            இந்தியாவில் எதை எதையோ கட்டாயப்படுத்துகிறார்கள். ஆதார் எண்ணோடு பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என்கிறார்கள். வங்கிக் கணக்கு ஆதார் எண் கட்டாயம் என்கிறார்கள். நலத்திட்ட உதவிகள் பெற ஆதார் எண் பெற கட்டாயம் என்கிறார்கள்.
            மோட்டார் வாகனங்கள் ஓட்டுவது என்றால் லைசென்ஸ் வாங்குவது, இன்ஷ்யூரன்ஸ் எடுப்பது கட்டாயம் என்கிறார்கள்.
            இரு சக்கர வாகனங்களில் செல்வது என்றால் ஹெல்மெட் கட்டாயம் என்கிறார்கள். நான்கு சக்கர வாகனங்களில் செல்வது என்றால் சீட் பெல்ட் கட்டாயம் என்கிறார்கள்.
            ஐம்பதாயிரத்துக்கு மேல் பணம் எடுத்தால், போட்டால் பான் எண்ணைக் கட்டாயம் ஸ்லிப்பில் எழுதுங்கள் என்கிறார்கள்.
            எல்லாவற்றையும் கட்டாயப்படுத்துவது போல ஓட்டுப் போடுவதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது?
            படித்தவர்கள் எழுபது சதவீதம் என்கிறார்கள், எண்பது சதவீதம் என்கிறார்கள். அந்த அளவுக்குக் கூட ஓட்டுகள் விழ மாட்டேன்கிறதே.
            இப்போது ஏகப்பட்ட வசதிகள் வந்து விட்டன. ஒரு டிஜிட்டல் கருவியைப் போலிங் பூத்தில் பயன்படுத்தி அத்தோடு ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ஓட்டளிக்காதவர்களை எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். அல்லது வேறு நல்ல தொழில்நுட்பம் கூட இதற்கு இருக்கலாம். ஏதோ எனக்குத் தெரிந்த ஒரு தொழில்நுட்பத்தைக் கூறியிருக்கிறேன்.
            ஓட்டுப் போடா விட்டால் இன்னின்ன சலுகைகள் கிடையாது என்ற அறிவித்து விட்டால், ஓட்டுப் போடுங்கள் என்று விளம்பரம் செய்யவே தேவையில்லை. ஒட்டு மொத்த சனமும் க்யூவில் நிற்கும். அத்தோடு அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற ஓட்டுப் போட்டதற்கான அடையாளச்சீட்டை நகலெடுத்து இணைக்க வேண்டும் என்று ஏதாவது சட்டம் போட்டு விட்டால்... அப்படி ஒரு அடையாளச் சீட்டைக் கூட போலிங் பூத்தில் கொடுக்கலாம் ஒரு கையெழுத்து ரப்பர் ஸ்டாம்ப் வைத்து. இவைகள் எல்லாம் இப்படியெல்லாம் பண்ணலாம் என்பன போன்ற யோசனைகள்தான். வேறு இதை விட நல்ல யோசனைகள் இருந்தால் தயவுசெய்து அதையே பரிசீலனையில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
*****

No comments:

Post a Comment

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்?

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்? மீன்களுக்கு நாம் நீர் நிலைகளை அமைத்துத் தர வேண்டுமா? அல்லது, தட்டான்களும் வண்ணத்துப் பூச்சி...