17 Mar 2019

Love demon



காதல் சூன்யக்காரி
சொர்க்கத்தில் சந்தித்த போது கண்ணீரும்
நரகத்தில் சந்தித்தப் போது முத்தமும்
பூமியில் சந்தித்தப் போது காதலும் தந்தவள் நீ
ஏன் இப்படி மாற்றி மாற்றித் தந்ததாய் என்றதற்கு
மாற்றித் தருவதுதான் காதல் என்றாய்
புன்னகைக்குக் கொஞ்சம் அழுகையும்
அழுகைக்குக் கொஞ்சம் புன்னகையும்
அறிவுக்குக் கொஞ்சம் அறியாமையும்
அறியாமைக்குக் கொஞ்சம் அறிவையும்
அன்புக்குக் கொஞ்சம் சண்டையையும்
சண்டைக்குக் கொஞ்சம் அன்பையும்
ருசித்துப் பார் என்பாய்
சோற்றுக்குக் கொஞ்சம் ஊறுகாயும்
ஊறுகாய்க்குக் கொஞ்சம் சோறும்
என்பது போலா என்ற என்னை
திகட்டாதத் தித்திப்புக்காரியாய் நோக்கி
கட்டெறும்பாய்க் கடிக்கத் தொடங்கினாய்
சுண்டுவிரலைக் கடித்துக் கொண்டேன் நான்
சுவைக்கத் தொடங்கினாய் நீ
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...