கட்டற்றதன் சிந்தனைக்குள் சிக்கி விடுவதாக
பல நேரங்களில் நினைப்பதுண்டு. அதற்கு ஒரு கணக்கில்லையோ என்று நினைத்திருக்கிறேன்.
உலகில் எல்லாவற்றிக்கும் ஒரு கணக்கு இருக்கிறது. கணக்கில்லாமல் என்ன இருக்கிறது? அந்தக்
கணக்குப் புரியாமல் இருக்கலாம். கட்டற்றதன் அந்தக் கணக்கு... நினைக்க நினைக்க ஒரு பிரபஞ்சத்தைப்
போல சுருள் சுருளாக, சில நேரங்களில் புனல் புனலாக விரிந்து கொண்டே செல்கிறது. ஒரு
கூம்பின் கனஅளவுக்கான சூத்திரம் அல்லது ஒரு பெருஉருளையின் கனஅளவுக்கானச் சூத்திரம்
அல்லது ஒரு பெருங்கோளத்தின் கனஅளவுக்கானச் சூத்திரம் என்று எதற்குள்ளாவது அது அடங்கி
விடும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். இந்த மனம்தான் அந்தப் பிரபஞ்சமாய் விரிகிறதா
என்றும் யோசித்திருக்கிறேன். கணக்குப் பிடிபட்டால் ஒருவாறாகச் சொல்லலாம். மனக்கணக்கு,
பிரபஞ்சக் கணக்கு இரண்டும் ஒன்றா அல்லது வேறா என்று.
*****
No comments:
Post a Comment