Indian employment System - A New
Review
அரசு வேலைக்கு முயற்சித்து 32 வயதில் வேலைக்குச்
சென்ற ஓர் அன்பரை சென்ற வாரம் சந்தித்தேன். இந்த வாரம் 36 வயதில் வேலைக்குச் சென்ற
ஓர் அன்பரைச் சந்தித்தேன். இருவரும் தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவற்றைப் பற்றி நீண்ட
நேரம் பேசினர். நீண்ட காலம் புத்தகங்களில் மூழ்கி முத்தெடுத்த கடுமையான உழைப்புப் பற்றியும்
சிலாகித்தார்கள்.
சராசரியாக அவர்கள் சொன்ன கணக்கின்படி
பார்த்தாலும் பத்தாண்டுகளுக்கு மேலாக அவர்கள் அரசுப் பணிக்காக தலைகீழாக நின்று முயற்சித்திக்கிறார்கள்.
அந்தக் கணக்கின்படியே பார்த்தால் இருபது வயதுக்கு மேலான ஒரு வயதிலிருந்து ஏதோ ஒரு
வயதில் தங்கள் இளமையெல்லாம் தொலைத்து முயன்றிருக்கிறார்கள்.
நீங்களே யோசித்துப் பாருங்களேன்! அவர்களின்
இளமைதானே வேலையில் துடிப்பாகச் செயல்படுவதற்கு அடிப்படை. அதையெல்லாம் தேர்வுத் தயாரிப்புகளில்
தொலைத்து விட்டு முப்பதுக்கு மேற்பட்ட வயதில் என்னவிதமான துடிப்போடு அவர்கள் வேலை
பார்ப்பார்கள்?
தங்கள் இளமையைப் பலியிட்டு தயாராகி வேலைக்குச்
செல்கிறார்கள். அந்த இளமைதானே வேலைக்குப் பயன்படுத்திக் கொள்ளப்பட வேண்டியது. இந்தியாவில்
வேலையின்மையை விரட்டியடிக்க இளமையை ஈடாகக் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்த ஒரு சான்றை
வைத்துப் பார்த்தால்... உலகில் இளைஞர்கள் அதிகம் இருந்தும் இந்தியாவின் முன்னேற்றம்
ஏன் தாமதப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேறெந்த சான்றுகளும் தேவையில்லை என்று
நினைக்கிறேன்.
அதன் பின் தாயும் மகளும் அரசு வேலைக்குச்
சென்ற செய்தியை நாளிதழில் படித்தேன்.
இதைத் தொடர்ந்து பேத்தியும், பாட்டியும்
ஒன்றாக வேலைக்குப் போகிறார்கள் என்று சிந்தித்து ஒருவர் புனைவாக எழுதினால் அதை வெறும்
ஜோக்காக மட்டும் பார்க்க இயலாது. அது இளமையை ஈடாகக் கேட்கும் இந்திய வேலைவாய்ப்பின்மையின்
கோர முகத்தைக் காட்டும் உண்மை.
*****
No comments:
Post a Comment