16 Mar 2019

Creating God is Eternal


கடவுள் சிருஷ்டிக்கப்படுகிறார்
விரைந்து கொண்டிருக்கும் இரு சக்கர வாகனத்தின்
சைடு ஸ்டாண்டை எடுத்து விடச் சொல்லி
சைகைக் காட்டிச் செல்பவரும்
அறிந்தவர் போல நொடிப் பொழுதும் யோசிக்காமல்
மிகு தாக நெருக்கடியில்
மினரல் வாட்டர் பாட்டிலை நீட்டுபவரும்
அவசர அவசரமாய்ச் செல்கையில்
விபத்தொன்றைப் பார்க்கையில்
108 க்குத் தகவல் சொல்லிக் காத்திருப்பவரும்
பைவ் மினிட்ஸ் ப்ளீஸ் எனக் கெஞ்சி
மரப்பு ஊசிப் போட வந்தவரை நிறுத்தி
சுகப்பிரசவத்துக்காகக் காத்து நிற்கும் தாதியும்
பாதாளச் சாக்கடையின் திறக்கப்பட்ட
மூடிக்கருகே குச்சி நட்டு அதன் உச்சியில்
பாலிதீனைப் பறக்க விட்டுச் செல்பவரும்
வியர்த்து வடியும் வாகன நெரிசலில்
சலிப்பின் நெருப்பில் காத்திருந்து கிளம்பும் நெருக்கடியில்
பேருந்து ஒன்றின் பின்பக்கக் கண்ணாடி வழி தெரிந்த
டாட்டா காட்டும் சிறுமிக்காக கை அசைப்பவரும்
இப்படித்தான் என்றில்லை
அப்படித்தான் என்றில்லை
எப்படியும் சிருஷ்டிக்கலாம் கடவுளை
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...