எப்போது மாறும் இந்த அவலம்?!
உணவு, உடை, உறைவிடம் மட்டுமா மனிதர்களின்
அடிப்படைத் தேவைகள்? பாதுகாப்பான குடிநீரும், சுகதாதாரமான கழிவறையும் கூடத்தான் மனிதர்களின்
அடிப்படைத் தேவைகள் அல்லவா! இன்னும் சொல்லப் போனால் இவைகள் இரண்டும் அனைத்து மனிதர்களின்
இயற்கையானத் தேவைகள்.
உணவு, உடை, உறைவிடம் இவைகளைக் காசு கொடுத்து
வாங்குவது போல பாதுகாப்பான குடிநீரையும், சுகாதாரமான கழிவறையையும் காசு கொடுத்துதான்
வாங்க வேண்டியிருக்கிறது.
பொதுஇடங்களுக்குப் போய் பாருங்கள்!
குடிநீர் வராத குழாய்கள் அநேகம்.
அருகில் உள்ள கடைகளில் காசு கொடுத்து
தண்ணீர் பாட்டிலை வாங்க வேண்டும் என்பதற்காகவே குடிநீர்க் குழாய்களில் தண்ணீர் வருவதில்லையோ
என்னவோ?!
அதே போல இலவசக் கழிவறைக்குள் நுழைய முடியாத
அளவுக்கு அசுத்தம். அருகில் இருக்கும் கட்டணக் கழிவறைக்குக் காசு கொடுத்துச் செல்ல
வேண்டும் என்பதற்காகவே இலவசக் கழிவறைகள் அப்படிப் பராமரிக்கப்படுகின்றனவோ என்னவோ?!
எப்போதுதான் மாறும் இந்த அவலம்?
மனிதர்களின் இயல்பான இயற்கைத் தேவைகளான
குடிநீர் மற்றும் கழிவறையை இலவசமாகப் பெறுவதற்கு மனிதர்களுக்குத் தகுதியில்லையோ என்னவோ?!
*****
No comments:
Post a Comment