7 Mar 2019

திசைச் சுற்று


திசைச் சுற்று
பிரசவத்தில் உயிர் பிழைத்த குழந்தையும்
மாரடைப்பில் மாண்டு போன தாதியும்
விபத்தில் செத்துப் போன பயணியர்களும்
உயிர் பிழைத்த ஓட்டுநரும்
மாநகர மாமழை வெள்ளத்தில் மாண்டவனும்
சுனாமிப் பேரலையில் நீந்தி வந்தவனும்
விண்வெளி ஓடத்தில் பாதுகாப்பாய் இருப்பவரும்
ஆழ்துளைக் கிணற்றில் உயிர் விட்டக் குழந்தையும்
சுரங்கத்தில் சிக்கிச் சிதிலமானத் தொழிலாளியும்
பூமியின் அடியில் ஆய்வகத்தின் விஞ்ஞானியும்
ஆப்பிரிக்காவில் பசியால் செத்தவரும்
அமெரிக்காவில் கொலஸ்ட்ராலில் மூச்சை நிறுத்தியவரும்
ஒரு திசையில் தாகத்தால் விக்கித்துச் சாகுபவரும்
எதிர் திசையில் குளிர் பானத்தால் போதை கொள்பவரும்
எப்படித்தான் இப்படியும் அப்படியும் சுற்றாமல்
ஒரே திசையில் சுற்றுகிறதோ பூமி
தலை சுற்றுகிறதே சாமி
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...