6 Mar 2019

காலப்பெருவெளிக் கவிதைகள்


காலப் பெருவெளி
னாதையாய்க் கொட்டிக் கிடக்கிறது காலம்
காலண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டதற்கு முன்
இருந்தக் காலத்திற்கு அதனால் வருத்தம் இருக்காது
கடிகாரங்கள் அளக்காத காலம் இருந்திருக்கிறது
கால இயந்திரம் கண்டுபிடிப்பது குறித்தும்
காலத்திற்கு ஆட்சேபனை இருக்காது
கொட்டிக் கிடக்கும் இலைகள்
பறந்து சென்றால் என்ன
பக்கத்தில் இருந்தால் என்ன
மரத்துக்கு என்ன கவலை
மைக்ரோ செகண்ட் துல்லியமாய் அளந்தாலும்
கொட்டிக் கொண்டிருக்கும் காலத்திற்கு என்ன
வற்றி விடவாப் போகிறது
அனாதியாய் விரிந்து கிடக்கிறது
அனாதையாய்க் கொட்டிக் கிடக்கும் காலம்
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...