5 Mar 2019

ஐ சி யு கவிதைகள்


அவசர சிகிச்சை ஒத்தி வைக்கப்பட்டவர்கள்
நீளம் குறைந்த சட்டைக்காக
கையை வெட்டிக் கொண்டனர்
பின் நீளமான சட்டைக்காக
சட்டையை வெட்டிக் கொண்டனர்
மாறி மாறி கையையும் சட்டையும்
வெட்டிக் கொண்டே போயினர்
எழுதுவற்கு கைகள் இல்லை என்று
வெளியேற்றப்பட்ட நீட் தேர்வுவாசிகளானப் பின்
இருந்த இரண்டு கைகளை
இழந்திருக்க வேண்டாமோ என யோசித்தவர்கள்
செய்த மேல் முறையீட்டுக் காகிதங்களை
இறுகக் கட்டிய தூக்குக் கயிற்றால்
நம்பிக்கையோடு இருந்தனர்
கட்டவிழ்ந்த காகிதங்கள் பறக்கத் தொடங்கிய போது
அதைப் பொறுக்கப் போய் விபத்துக்குள்ளானவர்கள்
அவசர மேல் சிகிச்சைக்காகக் காத்திருக்கிறார்கள்
அவரவர் மாநிலத்துக்குச் சென்று விட்ட
நீட் தேர்வு மருத்துவர்களுக்காக
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...